கடந்த 2020 ஆம் ஆண்டு தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் ஊரடங்கு போடப்பட்டது அந்த சமயத்தில் மக்கள் அவதிப்பட்டு இருந்தனர். அது மட்டும் இல்லாமல் ஒரு சில மக்கள் அத்தியாவசியாமன் பொருள் கூட வாங்க காசு இல்லாமல் தவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அதனைத் தொடர்ந்து பல மக்கள் தனது குடும்பங்களை பிரிந்து பெரும் அவதிப்பட்டு வாழ்ந்தனர். கொரோனாவின் தாக்கம் அதிகரித்ததனால் பல பிரச்சினைகளையும் சந்தித்து வந்தனர். இதனை தொடர்ந்து இளைஞர்களின் வேலைகளின் பறிபோனது அது மட்டுமல்லாமல் பலருக்கு சம்பள குறைவு ஏற்பட்டது. இதனால் பல இளைஞ்சர்கள் அவதி படுகின்றனர்.
அந்த சமயத்தில் சினிமா துறையும் முடங்கி கிடந்தது. அது மட்டுமல்லாமல் மொத்த திரையரங்குகளும் மூடிக்கிடந்தது. மேலும் பல சினிமா பிரபலங்கள் சென்ன செய்வது என்றே தெரியாமல் அவதிப்பட்டனர். அவர்களுக்கு பல நடிகர்கள் உதவினர். அதன் பிறகு கொரோனா குறைய ஆரம்பிக்கையில் கொஞ்சம் கொஞ்சமா திரையரங்குகள் திறக்க ஆரம்பித்தது. அதன் பிறகு சினிமாவில் இருந்து ஒவ்வொரு படங்களும் வெளியாக தொடங்கியது.
பின்னர் கொரோனா முழுமையாக குறைந்தவுடன் அனைத்து திரையரங்குகளும் தற்போது நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது இந்த நிலையில் கொரோனாவின் போது காசு இல்லாமல் தவித்து வந்த தமிழக மக்கள் திரையரங்கு திறந்து 10 மாதத்தில் ஆயிரம் கோடி செலவு செய்ததாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது சினிமா படத்தை பார்ப்பதற்காக தமிழக மக்கள் ஆயிரம் கோடி செலவழித்துள்ளதாக தற்போது கருத்துக்கணிப்பு ஒன்று தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா நேரத்தில் அவதிப்பட்டு இருந்த தமிழக மக்கள் திரையரங்கு திரந்தவுடன் ஆயிரம் கோடி செலவு செய்தது தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
சில திரைப்படங்கள் திரையரங்கில் வந்து கொண்டே தான் இருக்கிறது அதையும் பார்க்க தமிழக மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து இருக்கிறார்கள்.