நயன்தாரா-விக்னேஷ் சிவன் வாடகைத்தாய் தடைச்சட்டத்தை மீறினார்களா.? விளக்கம் அளித்த சட்ட வல்லுனர்..

தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடிகளாக வளம் வந்து கொண்டிருக்கும் நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவரும் ஏழு வருடங்களாக காதலித்து கடந்த ஜூன் ஒன்பதாம் தேதி அன்று திருமணம் செய்து கொண்டார்கள் இவர்கள் அக்டோபர் ஒன்பதாம் தேதி அன்று எங்களுக்கு இரு ஆண் குழந்தை பிறந்து விட்டதாகவும் நயன்தாரா அம்மாவாகிவிட்டதாகவும் கூறி விக்னேஷ் சிவன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

இது ஒட்டுமொத்த ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் என அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது இதனை தொடர்ந்து கடந்த 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் அமலுக்கு வந்த வாடகை தாய் தடை சட்டம் நயன்தாரா மீது பாயும் என பலவிதமான கேள்விகள் எழுந்து வரும் நிலையில் இது குறித்து பலரும் விமர்சனம் செய்து வருகிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் தற்போது சட்டம் நிபுணர் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் எம் ரமேஷ் இதற்கு தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளார். அதாவது அவர் கூறுகையில் நடிகை நயன்தாரா வாடகை விவாகரத்தில் ஜனவரி மாதத்திலேயே பதிவு செய்து இருக்க வேண்டும் ஏனென்றால் குழந்தை பத்து மாதம் என்று வைத்துக் கொண்டாலும் அக்டோபரில் பிறந்த குழந்தைக்கு ஜனவரியிலேயே நயன்தாரா பதிவு செய்திருப்பார்.

ஆனால் வாடகைத்தாய் தடைச் சட்டம் ஜூலை மாதம் முதல் நடைமுறையில் இருந்து வரும் நிலையில் அவருக்கு ஜனவரி 25ஆம் தேதி அன்று இந்த சட்டத்திற்கான அறிவிப்பு வந்துவிட்டதால் அதன் மூலம் நயன்தாரா பிரச்சனையில் சிக்குவர் என நினைக்கின்றனர். மேலும் இந்த சட்டம் ஜனவரி 25ஆம் தேதி அன்று வந்திருந்தாலும் இந்த விதிகள் ஜூன் 2022- க்கு பிறகுதான் நடைமுறையில் இருக்கிறது.

இதன் காரணமாக வாடகை தாய் மூலம் குழந்தை பெற்று எடுத்ததால் எந்த விதியையும் நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடிகள் மீறவில்லை மேலும் அவர்களுக்கு எந்த ஒரு பிரச்சனையும் கிடையாது எனவே மிகவும் ஜாலியாக தங்களுடைய இரண்டு குழந்தைகளையும் வளர்க்கலாம் இனி இந்த விவகாரத்தை தவிர்த்து விடலாம் என்றும் வாடகைத்தாய் தடைச் சட்டம் குறித்து வழக்கறிஞர் விளக்கம் அளித்துள்ளார்.

Leave a Comment