புதிய பிசினஸ்க்காக பல கோடிகளை வாரி இறைத்த நயன்தாரா.? அதிர்ச்சியான சினிமா பிரபலங்கள்.

nayanthara
nayanthara

தென்னிந்திய திரையுலகில் பல்வேறு விதமான சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்ததால் தற்போது வரையிலும் அசைக்க முடியாத நடிகை என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது நம்பர்-1 நடிகையாக வலம் வருகிறார் நயன்தாரா.

இவர் நடிப்பில் வெளியான பெரும்பாலான திரைப்படங்கள் வெற்றி பெற்றுள்ளதால் இன்னும் இவருக்கு திரையுலகில் பட வாய்ப்புகளை கொடுக்க இயக்குனர்களும்,  தயாரிப்பாளர்களும் வரிசைகட்டி நிற்கின்றனர்.

இவரது நடிப்பில் தற்போது அண்ணாத்த திரைப்படமும் சூட்டிங் முடிவடைந்ததை அடுத்து தீபாவளிக்கு வெளிவர உள்ளது அதனை தொடர்ந்து நெற்றிக்கண் போன்ற  பல்வேறு திரைப்படங்கள் வெளியாக உள்ளதால் நயன்தாரா தற்போது சந்தோஷத்தின் உச்சியில் இருந்து வருகிறார்.

இதைத் தாண்டி நயன்தாரா ஷாருக்கானுடன் இணைந்து ஒரு புதிய படத்தில் நடிக்க இருக்கிறார் இந்தநிலையில் காதலர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஆகியோர் இணைந்து ஊர் சுற்றுவதையும் தாண்டி தற்போது புதிய பிசினஸில் முதலீடு செய்துள்ளனர்.

அந்த வகையில் நயன்தாரா விக்னேஷ் சிவனும் இணைந்து சாய் வாலே புதிய டீக்கடையில் முதலீடு செய்துள்ளனர் அந்த பிசினஸ்க்காக இருவரும் சேர்ந்து 5 கோடி முதலீடு செய்துள்ளதாக தற்போது தகவல்கள் தெரிவிக்கின்றன

மேலும் இவர்கள் இருவரும் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது