தனுஷின் வாத்தி ரசிகர்களை கவர்ந்ததா.? இல்லை சோதித்ததா.? இதோ முழு விமர்சனம்

தனுஷ் தற்பொழுது தெலுங்கு பட இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் தான் வாத்தி இந்த திரைப்படத்தில் சம்யுக்தா, சமுத்திரகனி, கென் கருணாக்ஸ், மொட்டை ராஜேந்திரன், ஆகியவர்கள் நடித்துள்ளார்கள் அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் தான் இசையமைத்துள்ளார். தனுஷ் வாத்தியாராக ரசிகர்களை கவர்ந்தாரா இல்லை ரசிகர்களை சோதித்தாரா என்பதை இங்கே காணலாம்.

படத்தின் கதை.

1990 ஆம் ஆண்டு ஆரம்ப காலகட்டத்தில் இந்தியாவில் தனியார் மயமாக்கல் கொள்கை அமலுக்கு வந்தது. மருத்துவம், பொறியியல் கல்வி, என வியாபார வளர்ச்சி நோக்கத்தை தெரிந்து கொண்டு தனியார் பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்டது நுழைவு தேர்வுக்கு பயிற்சி மையங்களை தொடங்கி நன்றாக பணி செய்யும் ஆசிரியர்களை விலைக்கு வாங்கி அரசு பள்ளிகளை மூடுகிறார்கள். மூடப்பட்ட அரசு பள்ளிகளை திறக்க மக்கள் போராட்டம்  செய்வதால் அரசு கட்டண ஒழுங்குமுறை விதியை கொண்டு வந்து தனியார் பள்ளிகளுக்கு செக் வைக்க நினைக்கிறது.

இதை அனைத்தையும் தெரிந்து கொண்ட அந்தக் கூட்டமைப்பின் தலைவர் ஆன ஒருவர் சமுத்திரகனி அரசு பள்ளிகளை அனைத்தையும் தத்தெடுத்து அனைவருக்கும் கல்விக் கொடுப்பதாக அறிவிக்கிறார். அதனால் மூடப்பட்ட அரசு பள்ளிகளுக்கு தனியார் பள்ளிகளை சேர்ந்த இரண்டாம் கட்ட மூன்றாம் கட்ட ஆசிரியர்களை அனுப்பி கல்வியை கெடுக்க நினைக்கிறார். ஆனால்கல்வி அனைத்து மாணவர்களுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நல்ல உள்ளத்தில் தனுஷ் இருக்கிறார்.

தனுஷ் சென்ற ஊரில் உள்ள மாணவர்களுக்கு தனுஷ் ஆசைப்பட்டது போல் மாணவர்களுக்கு கல்வி கிடைத்ததா அல்லது சமுத்திரகனியின் எண்ணம் நிறைவேறியதா என்பதே இந்த திரைப்படத்தின் கதை.

தனுஷ் இந்த திரைப்படத்தில் பாலமுருகன் ஆசிரியராக நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை ஆரம்பத்தில் பார்க்கும் பொழுது தனியார் பள்ளிகளின் அட்டகாசங்களை தோலுரித்துக் காட்டப்போகிறது என நினைப்பார்கள் அப்படி நினைப்பவர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது இந்த திரைப்படத்தில் எந்த ஒரு காட்சியும் அதிக அழுத்தம் இல்லாமல் காட்டியது போல் இருக்கிறது.

மேலும் குழந்தை தொழிலாளர்களை மீண்டும் பள்ளிக்கு வர வைப்பது சாதி பிரச்சனைக்கு தீர்வு காண்பது என ஏற்கனவே பல திரைப்படங்களில் இது போல் காட்சிகளை நாம் பார்த்து இருப்போம் அதனால் கொஞ்சம் சளிப்பை தட்டும் வகுப்பு எடுக்காமல் இருக்கும் அரசு ஆசிரியர்கள் வியாபார நோக்கத்துடன் இருக்கும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் என அனைத்தும் ஏற்கனவே பல திரைப்படங்களில் நாம் பார்த்திருப்போம் இந்த கதையை.

இந்த திரைப்படத்தில் மீனாட்சி ஆக வரும் நடிகை சம்யுக்தா அவர்களுக்கு பெரிய அளவில் கேரக்டர் இல்லை என்றாலும் வா வார்த்தி பாடலில் அனைவரையும் ரசிக்க வைத்து விட்டார். அதே போல் படம் முழுக்க முழுக்க தெலுங்கு சினிமா ஸ்டைலில்  இருப்பது அப்படியே தெரிகிறது. அதேபோல் சமுத்திரகனி எந்த ஒரு வில்லன் கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் மிகவும் மிரட்டலாக நடித்திருப்பார் ஆனால் இந்த திரைப்படத்தில் அவருடைய கதாபாத்திரம் அவருக்கு பொருந்தவில்லை.

குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் ஊரில்  இருக்கும் திரையரங்கை பாடம் நடத்துவதற்காக பயன்படுத்துவது விதவிதமாக கெட்டப் போட்டு பாடம் நடத்துவது பாரதியார் வேஷம் போட்டு சண்டை போடுவது தங்கள் பிள்ளைகளின் கல்வியை கெடுக்க நினைக்கும் ஊர் மக்கள் உடனே திரிந்து விடுகிறார்கள் இப்படி பலவிதமான  லாஜிக் மிஸ் காட்சிகள் இருக்கிறது. மேலும் இந்த திரைப்படத்தில் பாரதிராஜா ஒரே ஒரு காட்சிக்கு மட்டும் தான் தலை காட்டுகிறார் அதேபோல் கருணாசின் மகன் கென் கருணாஸ் எதற்காக வருகிறார் என்றே தெரியவில்லை.

இசையை பொருத்தவரை ஜீவி பிரகாஷ் குமார் வா வாத்தி, நாடோடி மன்னன் ஆகிய பாடல்களை அனைவரையும் ரசிக்க வைத்து விட்டார். பின்னணி இசையில் தன்னால் முடிந்த வரை மிகவும் பெஸ்ட் ஆக கொடுத்துள்ளார். மொத்தத்தில் வாத்தி நன்றாக கதை அமைந்தாலும் திரைக்கதையில் கொஞ்சம் சொதப்பிவிட்டார் வெங்கி அட்லூரி. மேலும் படிப்பு தான் மரியாதையை சம்பாதித்து தரும் படிப்பு என்பது பிரசாதம் மாதிரி கொடுங்க அதை பைவ் ஸ்டார் ஹோட்டலில் சென்று சாப்பிடற மாதிரி வைக்காதீர்கள்.

கல்வியில் கிடைக்கிற காசு அரசியலில் கிடைக்காது என ஆங்காங்கே பேசும் வசனங்கள் அனைத்தும் ரசிகர்களை கைதட்ட செய்கிறது மொத்தத்தில் வாத்தி தெலுங்கு பேசும் ஒரு தமிழ் திரைப்படம்.

Leave a Comment