வசூலில் விஜய் அஜித்திற்கு பிறகு அடுத்த இடத்தைப் பிடித்தாரா தனுஷ்.! கர்ணன் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா.?

தமிழ் சினிமாவில் தற்போது டாப் ஹீரோக்களாக பார்க்க படுவர்கள் ரஜினி, அஜித், விஜய் ஆகியோர் அவரை தொடர்ந்து அடுத்த இடத்தை பிடிக்க விக்ரம், சூர்யா, கார்த்தி ஆகியோர்கள் தவித்துக் கொண்டிருந்த நிலையில் அந்த இடத்தை லாபகரமாக தற்போது தன்வசப்படுத்தி உள்ளார் நடிகர் தனுஷ்.

அதற்கு காரணம் இவர் சமீபகாலமாக தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு திரைப்படமும் வசூல் வேட்டை நடத்துவதோடு மக்களுக்கு பிடித்து போய் உள்ளதால் இப்பொழுது அந்த இடத்திற்கு அவர் சொந்தக்காரராக மாறி உள்ளார். மேலும் படம் வசூலிலும் அபார வளர்ச்சியை எட்டியுள்ளது.

அந்த வகையில் இரு தினங்களுக்கு முன்பு தனுஷின் கர்ணன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது இந்த திரைப்படத்தை மாரி செல்வராஜ் தனது கதைக்கு ஏற்றவாறு இயக்கியிருந்தார்.

மேலும் இந்த திரைப்படத்தை கலைபுலி தாணு தயாரித்துள்ளார். படம் திரையரங்கில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றதோடு வசூலிலும் வாரிசு வைக்க தொடங்கி உள்ளது அந்த வகையில் இந்த திரைப்படம் முதல் நாளில் மட்டும் சுமார் 10 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.

முதல் நாளே வசூலை அள்ளி உள்ளதால் போக போக இன்னும் கோடிகளை குவிக்கும் என தெரியவருகிறது அதுமட்டுமல்லாமல் அஜித் விஜய் திரைப்படங்களுக்கு பிறகு ஒரு நாள் 10 கோடியை அள்ளிய திரைப்படமாக தனுஷ் திரைப்படம் பார்க்கப்படுகிறது.

மேலும் விநியோகஸ்தர்களும் அஜித் விஜய் படத்திற்கு பிறகு நல்ல வரவேற்ப்பை தனுஷ் படம் தான் வைத்துள்ளதாகவும் கூறுகின்றனர்.

கர்ணன் திரைப்படம் தனுஷின் 19 வருட திரைவாழ்க்கையில் ஒரு மறக்க முடியாத படமாக இருக்கும் எனவும் கூறுகின்றனர். ஏனென்றால் அந்த அளவிற்கு இந்த திரைப்படம் வசூலில் வாரி குவிக்கும் என தெரியவருகிறது.

Leave a Comment