கேப்டன் விஜயகாந்தின் தவசி திரைப்படம் படு தோல்வி அடைந்ததா..? ரகசியமான காரணத்தை வெளியிட்ட தயாரிப்பாளர்..!

தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகராக வலம் வந்தவர் தான் நடிகர் விஜயகாந்த் கேப்டன் விஜயகாந்த் என ரசிகர்கள்  கொண்டாடி வருகிறார்கள். இவர் நடிப்பில் கடந்த 2001ஆம் ஆண்டு வெளிவந்து பட்டிதொட்டியெங்கும் பிரபலமான ஒரு திரைப்படம் என்றால் அது தவசி திரைப்படம் தான்.

இத்திரைப்படத்தில் விஜயகாந்த் இரண்டு வேடங்களில் நடித்திருப்பார்  மேலும் இத்திரைப்படத்தில் கதாநாயகியாக நடிகை சௌந்தர்யா நடித்து அசத்தியிருப்பார். அதுமட்டுமில்லாமல் இத்திரைப்படத்தில் இடம்பெற்ற வடிவேலுவின் காமெடி காட்சிகளை மறக்கவே முடியாது.

இவ்வாறு வெளிவந்த இந்தத் திரைப்படமானது நல்ல வரவேற்ப்பை பெற்றது மட்டுமல்லாமல் ரசிகர் மத்தியில் இடம்பிடித்து விட்டது ஆனால் இத்திரைப்படம் படுதோல்வி அடைந்துள்ளதாக இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் கூரியது ரசிகர்களை பெரும் ஆச்சரியத்தில் உள்ளாக்கியது.

என்னதான் இத்திரைப்படம் ரசிகர்களுக்கு பெருமளவு பிடித்திருந்தாலும் இத்திரைப்படம் தயாரிப்பாளரை நடுக்கடலில் தள்ளி விட்டதாக கூறப்படுகிறது ஏனெனில் இத்திரைப்படத்தின் மூலம் எந்த பலனையும் நான் பெறவில்லை என தயாரிப்பாளர் ஞானவேல் கூறியுள்ளார்.

ஞானவேல் 90s காலகட்டத்தில் சிறுசிறு திரைப்படங்களாக தயாரித்து  வந்தவர். இப்படிபட்ட தயாரிப்பாளர் இத்திரைப்படம் தோல்வி அடைந்ததற்கு தாங்கள் தான் காரணம் என்றும் கூறியுள்ளாராம் ஏனெனில் இவ்வளவு சிறப்பாக திரைப்படம் எடுத்த எங்களுக்கு அதை எப்படி விளம்பரம் செய்வது என்பது தெரியாமல் போய்விட்டது.

இதன் காரணமாகத்தான் இத்திரைப்படம் எங்களுக்கு  தோல்வியை கொடுத்தது ஆனால் இப்படிப்பட்ட திரைப்படம் வந்தால் அதனை எப்படி விளம்பரம் செய்ய வேண்டும் என்பது எங்களுக்கு நன்றாக தற்போது தெரிந்து விட்டது எனவும் கூறியுள்ளார்.

Leave a Comment