ஜெய் பீம் படத்தில் நடித்ததால் அல்லிக்கு டிசி கொடுக்கப்பட்டதா..? அல்லியின் பெற்றோர் விளக்கம்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா இவர் சமீபத்தில் ஜெய்பீம் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் இவ்வாறு உருவான இந்த திரைப்படத்தை இயக்குனர் அவர்கள்தான் இயக்கியுள்ளார் இவ்வாறு வெளிவந்த இத்திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது மட்டுமல்லாமல் திரைப்படமானது அமேசான் பிரைம்மில் வெளியாகியது.

மேலும் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் லிஜோமொல் ஜோஸ் மற்றும் பிரகாஷ்ராஜ் உள்பட பல்வேறு பிரபலங்கள் நடித்துள்ளார்கள். இவ்வாறு வெளிவந்த இத்திரைப்படம் ஆனது ரசிகர்களின் பாராட்டு மட்டுமல்லாமல் இத்திரைப்படம் நீதிபதி சந்துரு அவர்களின்  வாழ்க்கை வரலாறு கதை ஆகும் என கூறப்படுகிறது.

ஆனால் இத்திரைப்படம் வெளிவந்த நேரத்திலிருந்து திரைப்படத்தின் மீது பல்வேறு சர்ச்சைகள் எழுந்து கொண்டிருக்கிறது. ஏனெனில் இத்திரைப்படத்தில் பழங்குடிப் பெண்ணுக்காக போராடும் ஒரு வழக்கறிஞராக நடிகர் சூர்யா நடித்துள்ளார். மேலும் இத்திரைப்படம் வெளியானதிலிருந்து மக்களின் மனதில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் சூர்யாவின் தைரியத்தையும் நடிப்பையும் பார்த்து பல பிரபலங்களும் அவருக்கு பாராட்டு தெரிவிப்பது மட்டுமல்லாமல் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.  இந்நிலையில் இந்த திரைப்படத்தில் ராஜகண்ணு மகளாக நடித்த அல்லி என்ற கதாபாத்திரத்தில் நடித்த குழந்தை பற்றிய ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

jai-beem

அதாவது இந்த திரைப்படத்தில் சூர்யா அவர்கள் கால் மேல் கால் போட்டு செய்தித்தாள் படிப்பார் அதே போல அந்த சிறுமியும் கால் மேல் கால் போட்டு செய்தித்தாள் படிப்பார்.  இந்த திரைப்படத்தில் அந்த சிறுமிக்கு கொடுத்த ஒரு கதாபாத்திரம் என்றால் அது இதுவாகத்தான் இருக்கும்.

அந்த வகையில் இந்த சிறுமி இந்த திரைப்படத்தில் நடித்ததன் காரணமாக தன் படித்துக்கொண்டிருந்த பள்ளி நிர்வாகத்தில் இருந்து டிசி கொடுத்துவிட்டதாக  செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் அதற்கான விளக்கத்தை அந்த சிறுமியின் பெற்றோர்கள் கூறியுள்ளார்கள்.

alli-1

இவ்வாறு நடந்தது என்னவென்றால் இந்த படத்தில் நடிப்பதற்காக என் மகளுக்கு டிசி கொடுத்ததாக வெளிவந்த செய்தி அனைத்தும் பொய்யான தகவல் இவை உண்மை கிடையாது.  அதுமட்டுமில்லாமல் பள்ளி நிர்வாகமானது எங்களுக்கு ஆதரவாக தான் இருந்தன.  மேலும் இந்த திரைப்படத்தில் நடித்ததன் பிறகு என்னுடைய குழந்தைக்கு சினிமா வாய்ப்புகள் குறைந்துகொண்டே இருக்கிறது என அந்த சிறுமியின் பெற்றோர் கூறியுள்ளார்.

Leave a Comment

Exit mobile version