வலிமை திரைப்படத்திற்காக ரசிகர்களை சந்தித்தாரா அஜித்.?

அஜித் குமார் சினிமா உலகில் பல்வேறு வெற்றி / தோல்வி படங்களை கொடுத்து இருந்தாலும் தனக்கென ஒரு கொள்கையை வைத்துக் கொண்டு பயணிக்கிறார் அது ரசிகர்களுக்கும் பிடித்து போவதால் தற்போது தமிழ் சினிமாவில் தொடமுடியாத உச்சத்தை எட்டி உள்ளார்.

உண்மையில் சொல்லப்போனால் அஜித் ரசிகர்கள் அவரது நடிப்பைப் பார்த்து பின்பற்றுகிறார்களோ இல்லையோ அவரது நேர்மை, நல்ல குணம் ஆகியவற்றை பார்த்து பல கோடி ரசிகர்கள் அவரை பின்பற்றி வருகின்றனர்.

தனது ரசிகர்களுக்கு ஏற்றவாறு படங்களை கொடுத்து வருகிறார் அந்த வகையில் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை தொடர்ந்து அஜித் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் வலிமை. இந்த படம் இரண்டு வருடங்கள் கழித்து ஒரு வழியாக பிப்ரவரி 24 ஆம் தேதி கோலாகலமாக படம் வெளியாக இருக்கிறது.

ரசிகர்களும் முட்டி மோதிக்கொண்டு படத்தை பார்க்க முன்பதிவு செய்து வருகின்றனர் வலிமை திரைப்படம் தமிழை தாண்டி  கன்னடம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அஜித்தின் வலிமை படம் வேற லெவலில் இருப்பதால் நிச்சயம் மிகப்பெரிய ஒரு வசூல் வேட்டையை காணும் என கணிக்கப்பட்டுள்ளது

வலிமை படம் வெளிவர இன்னும் இரண்டு,மூன்று நாட்கள் இருக்கின்ற நிலையில் வேற லெவல் புரமோஷன் செய்ய படக்குழு இன்னும் திட்டம் தீட்டி தான் வருகிறது அந்த வகையில் பெங்களூரில் இன்று மாலை 7 மணிக்கு வலிமை படத்தில் பணியாற்றிய பல பிரபலங்கள் கலந்து கொண்டு பேசுகின்றனர்.

அதில் ஒருவராக அஜித் வர அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது இருப்பினும் சமீபகாலமாக தனது படங்களுக்கு பிரமோஷன் செய்ய வரமாட்டார் என்பது அவரது கொள்கைகளில் ஒன்று அதையே பின்பற்றி வருகிறார் அப்படி இருக்கின்ற நிலையில் இதற்கு வர மாட்டார் என்பதே பலரின் கணிப்பாக இருக்கிறது இருப்பினும் ஒரு சிலர் வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறி வருகின்றனர்.

Leave a Comment