துருவ் விக்ரம் மற்றும் மாரி செல்வராஜ் இணையும் படத்தின் டைட்டில் என்னவென்று தெரியுமா.?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் சியான் விக்ரம். இவரது மகனான துருவ் விக்ரம் ஆதித்யா வர்மா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

ஆதித்ய வருமா படத்தில் நடித்ததன் மூலம் பட்டிதொட்டி எக்கும் இவரது புகழ் பரவியது.துருவ் என்னதான் இந்த ஒரு படத்தில் நடித்திருந்தாலும் இவருக்கென ஒரு தனி ரசிகர்கள் பட்டாளம் உருவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.அதன் பிறகு துருவ் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.இந்த படத்தை முகேஷ் மேத்தா அவர்கள் தயாரித்து உள்ளார்.

இத்திரைப்படம் தெலுங்கு திரைப்படமான அர்ஜுன் ரெட்டி என்ற திரைப்படத்தின் ரீமேக் திரைப்படமாகும்.என்னதான் அர்ஜுன் ரெட்டி திரைப்படம் மூலப்பைடமாக இருந்தாலும் இப்படத்தில் உள்ள பல காட்சிகள் இடம் பெறாமல் போனது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து தனது தந்தையான விக்ரம் அவர்களுடன் சியான் 60 படத்தில் துரு விக்ரம் நடித்துள்ளார். அதன் பின்னர்  மாரி செல்வராஜ் இயக்கத்தில் பா ரஞ்சித் தயாரிப்பில் உருவாகிவரும் திரைப்படத்தில் துரு விக்ரம் நடிக்க உள்ளார்.

dhruv vikram
dhruv vikram

இந்த திரைப்படம் கபடி போட்டியை மையமாக கருத்தில் கொண்டு எடுக்கப்படும் என ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது. தற்போது இந்தப்படத்தின் தலைப்பு வெளியாகியது அதாவது கபடி வீரன் என டைட்டில் வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் துருவின் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். ஆனால் இந்த படத்தின் தலைப்பு அதிரபூர்வமாக வெளியாகவில்லை.

Leave a Comment