விக்ரம் மகன் துருவ் விக்ரம் பேசிய வீடியோவை வெளியிட்டு பாலா ஷிவாணியை பங்கம் செய்யும் நெட்டிசன்கள் காது ஜவ்வு கிழியிதுடா சாமி… வைரலாகும் வீடியோ

dhuruv vikram about balaji shivanni video : கடந்த சில வாரங்களாகவே பிக்பாஸ் நிகழ்ச்சி மிகவும் பரபரப்பாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது அதிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே கண்டிப்பாக காதல் காட்சி இருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

அந்த வகையில் இந்த வருடத்தின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாலாஜி மற்றும் கேப்ரில்லா விற்கு டிராக் ஓடும் என அனைவரும் எதிர்பார்த்தார்கள் ஆனால் பாலாஜி கேப்ரில்லா வை தங்கை என கூறிவிட்டார். அப்படி இருக்கும் வகையில் தற்போது பாலாஜி, ஷிவானி லவ் ட்ராக் தான் ஓடிக்கொண்டிருக்கிறது.

என்னதான் பாலாஜி மற்றும் சிவானி இருவரும் எங்களுக்குள் காதல் கிடையாது என சொல்லிக்கண்டே இருந்தாலும் சக போட்டியாளர்கள் இவர்கள் காதல் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள் என பேசிக்கொண்டு வருகிறார்கள்.  ஆனால் பாலா இந்த காதல் கதையை ஒப்புக் கொள்ளாமல் தான் இருந்து வருகிறார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு நாமினேஷன் டாஸ்க் நடைபெற்ற பொழுது ஆரி பாலாஜியை நாமினேட் செய்தார், அப்பொழுது பாலாஜிக்கு காதல் கண்ணை மறைக்கிறது என கூறியிருந்தார். நாமினேஷன் முடிந்தவுடன் பிக் பாஸ் போட்டியாளர்கள் சொன்ன அனைத்து காரணங்களையும் போட்டு உடைத்தார்.

அப்பொழுது பிக்பாஸ் காதல் கண்ணை மறைக்கிறது என கூறியதும் பாலாஜி செம்ம கடுப்பானார், உடனே பாலாஜி இங்கே யாருக்கும் காதல் எல்லாம் கிடையாது அப்படி ஏதாவது என் காதில் விழுந்தால் நான் நன்றாக கேட்டு விடுவேன் என கூறினார். அதுமட்டுமில்லாமல் சிறிது நேரம் கழித்து சிவானியிடம் எனக்கு உன் மீது காதல் எதுவும் கிடையாது.

அப்படி காதல் வந்தால் கண்டிப்பாக சொல்கிறேன் என கூறினார் பாலாஜி.  பாலாஜி மற்றும் சிவானி ரொமான்ஸ் விஷயத்தில் இருவருமே இலைமறைகாயாக தான் சென்று கொண்டிருக்கிறார்கள், ஆனால் சிவானி, பாலாஜி மீது அதீத காதலை வைத்துள்ளதாக தெரிகிறது.

அதுமட்டுமில்லாமல் சிவானியிடம் ஆரி நேரடியாக கேட்டு விட்டார்.  மேலும் பாலாஜி சிவானியை எத்தனை முறை தட்டி கழித்தாலும் சிவானி பாலாஜி சுற்றி வருகிறார். அதனால் மீம்ஸ் மற்றும் வீடியோக்களை நெட்டிசன்கள் கிரியேட் செய்து வைரலாகி வருகிறார்கள்.

அந்த வகையில் விக்ரம் மகன் துருவ் விக்ரம் ஒரு மேடையில் பாலா மாமா மாமா மாமா என்று கூறுவார், அந்த வீடியோவை ஷிவானி மற்றும் பாலாவை வைத்து எடிட் செய்து நெட்டிசன்கள் வெளியிட்டுள்ளார்கள். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Comment