துருவ் விக்ரம் அடுத்து யாருடன் கைகோர்க்கிறார் தெரியுமா.? இதோ உண்மையான தகவல்

தமிழ் சினிமாவில் இளம் நடிகர்களில் ஒருவர் துருவ் விக்ரம், இவர் முதன்முதலில் அர்ஜுன் ரெட்டி ரீமேக்கான ஆதித்யா வர்மா திரைப்படத்தில் நடித்து பிரபலம் அடைந்தார், தற்பொழுது இவருக்கு இளம் தலைமுறையினர் ரசிகர் பட்டாளம் அதிகமாக உருவாகி வருகிறார்கள்.

குறிப்பாக பெண்கள் ரசிகைகள் அதிகமாகி விட்டார்கள், இந்த நிலையில் துருவ் விக்ரம் அடுத்ததாக யார் இயக்கத்தில் நடிக்கப் போகிறார் என்ற கேள்வி தான் அனைவரிடமும் இருந்து வருகிறது, இந்த நிலையில் துருவ் விக்ரம் அடுத்ததாக எந்த திரைப்படத்திலும் நடிக்கவில்லை அமெரிக்காவிற்கு படிப்பதற்காக சென்று விட்டார் எனக் கூறப்பட்டது.

ஆனால் துருவ்விக்ரம் மீண்டும் வந்து விட்டார் எனவும் இவர் அடுத்ததாக பரியேறும் பெருமாள் படத்தை இயக்கிய மாரிசெல்வராஜ் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் இணைய இருக்கிறார் என்றும் பிரபல வார இதழ் ஓன்று வெளியிட்டது.

இந்தநிலையில் துருவ் விக்ரம் பல இளம் இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறாராம், அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் கூட ஒரு போட்டோ சூட்டி எடுத்துள்ளார், அதனால் கண்டிப்பாக அடுத்த திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் எதிர்பார்க்கலாம் என தெரிகிறது.

Leave a Comment