தாடி, மீசை என ரவுடி கெட்டப்பில் துருவ் விக்ரம்.! இணையத்தில் வைரலாகும் மகான் திரைப்படத்தின் புதிய டீசர்.!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக களம் இறங்கி தற்போது நிறைய திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வரும் நடிகர் தான் துருவ் விக்ரம் இவர் தனது தந்தையின் வழியில் வலம் வருகிறார் என்று கூட கூறலாம். அந்த அளவிற்கு தனது தந்தை எப்படி நடிப்பாரோ அதேபோல் அபூர்வமாக இவரும் நடித்து வருகிறார்.

நடிகர் விக்ரமும் தனது ஆரம்ப காலகட்ட சினிமா வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்பட்டு வந்தார் சேது திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகராக வலம் வரத்தொடங்கினார் அதேபோல் இவரது மகன் துருவ் விக்ரம் ஆதித்யா வர்மா என்ற திரைப்படத்தில் நடித்து மிகவும் உச்ச நட்சத்திரமாக தற்போது புகழ்பெற்று விளங்கி வருகிறார் இவர் நடிப்பில் ஒரு சில திரைப்படங்கள் உருவாகி வந்தாலும் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் ஆகிய இருவரும் இணைந்து நடித்து வரும் மகான் திரைப்படத்தை இவரது ரசிகர்கள் மிக ஆவலாக எதிர்பார்த்து வருகிறார்கள்.

அந்த வகையில் பார்த்தால் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இந்த திரைப்படத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார் மேலும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று காலை மகான் திரைப்படத்திலிருந்து துருவ் விக்ரம் நடிக்கும் கதாபாத்திரத்திற்கான புதிய போஸ்டரை சமூக வலைதள பக்கங்களில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து துருவ் விக்ரம் நடிக்கும் மகான் திரைப்படத்திலிருந்து புதிய டீசர் ஒன்று சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது ஆக மொத்தத்தில் இந்த திரைப்படத்தில் துருவ் விக்ரம் பார்ப்பதற்கு ஒரு தாதா போன்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் துருவ் விக்ரம் அடிக்கடி தியானம் செய்வார் என்பதும் தெரியவந்துள்ளதால் இதில் கண்டிப்பாக இவர் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் என பல ரசிகர்களும் இந்த டீசரை பார்த்து விட்டு கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Leave a Comment