தோனிக்கு அதிரடியாக ஆப்பு வைக்கும் மூவர்.! இனி தோனியால் இந்திய அணியில் நுழைய முடியாதா.?

0
dhoni cricket
dhoni cricket

இந்திய அணியில் தோனிக்கு இனி இடமே இருக்காது என்ற நிலை உருவாக இருக்கிறது இதற்கு புதிய திட்டத்தை செயல்படுத்த இருக்கிறார்கள் என கூறப்படுகிறது.

2020 இல் தொடங்கும் டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியை தயார் செய்து வருகிறது கிரிக்கெட் வாரியம், இந்த அணியில் இளம் வீரர்களை மட்டுமே தேர்வு செய்ய பிசிசிஐ முயற்சி செய்துள்ளது, குறிப்பாக விக்கெட் கீப்பர் பற்றிய பிசிசிஐ திட்டம் செயல்படுத்தப்பட்டால் தோனி இந்திய அணிக்குள் நுழைய முடியாத நிலை ஏற்படும்.

2019 உலக கோப்பை போட்டியில் இந்திய அணி அரையிறுதி உடன் வெளியேறியது அதனால் 2020இல் நடக்க இருக்கும் டி20 போட்டியில் கண்டிப்பாக வெல்ல வேண்டும் என்று தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது, அதனால் புதிய திட்டத்தை செயல்படுத்த இருக்கிறது. விராத் கோலி மற்றும் ரவி சாஸ்திரி அதற்கான முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் தொடரில் தற்போது ஆடி வருகிறது இதனை தொடர்ந்து அடுத்ததாக தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக தொடரில் விளையாட இருக்கிறது, ஆனால் இந்த போட்டியில் தோனி இடம்பெற மாட்டார் என தெரிகிறது, ஏனென்றால் தேர்வுக்குழு விவாதப்பொருளாக கூட இவரை எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என கூறுகிறார்கள்.

டி20 போட்டியில் 3 விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களை தேர்வு செய்ய இருக்கிறார்கள், அந்த மூன்று வீரர்கள் ரிஷப் பண்ட், இஷான் கிஷான், சஞ்சு சாம்சன் ஆகியோர்கள் அவர்கள். இதில் டி20 அணியில் விளையாட ரிஷப் பாண்ட் தான் அதிக வாய்ப்பு.

அதே சமயத்தில் இந்த மூன்று விக்கெட் கீப்பர் களும் அணியில் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது, ஏனென்றால் இதற்கு முன் தோனி, தினேஷ் கார்த்திக் ரிஷப் பான்ட் ஆகியோர் உலக கோப்பை தொடரில் விளையாடியது குறிப்பிடதக்கது அதேபோல் டி20 தொடரிலும் தற்பொழுது நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படி இந்த திட்டம் செயல் படுத்தபட்டால் தோனி இனி விளையாடுவது கடினம் தான் என கூறிகிறார்கள்.