ஐசிசி வெளியிட்ட வீடியோவை பார்த்து கண் கலங்கும் ரசிகர்கள்.!

0
dhoni-run-out
dhoni-run-out

அரையிறுதிப் போட்டியில் இந்தியாவும் நியூசிலாந்து அணியும் மோதிக் கொண்டன இதில் தோனியின் ரன் அவுட் இந்தியாவின் ஆட்டத்திற்கு  திருப்புமுனையாக அமைந்தது அதன் வீடியோவை ஐசிசி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இங்கிலாந்தில் நடைபெற்ற உலக கோப்பை போட்டியில் இந்தியாவும் நியூசிலாந்து அணியும் மோதிக் கொண்டன இந்த போட்டியில் நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 239 ரன்கள் எடுத்திருந்தது 240 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இறங்கிய இந்திய அணி 221 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது, அதனால்  இந்திய அணி 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது இதனால் நியூஸிலாந்து அணி உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு தேர்வாகியுள்ளது.

இந்திய அணியின் நட்சத்திர வீரரான தோனி கடைசி வரை களத்தில் நின்று நியூசிலாந்து அணியை மிரட்டிக் கொண்டிருந்தார் இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்ல தோனி தனது அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார், ஆனால் 48.2 ஆவது ஓவரில் அடித்த ஆடிய தோனி 2 ரன்கள் ஓட்டங்களை எடுக்க முயன்றார், ஆனால் கப்திலின் அற்புதமான துரோவாள் தோனியை ரன் அவுட் செய்தார் இந்த வீடியோவை ஐசிசி தற்பொழுது வெளியிட்டுள்ளது.

தோனி மட்டும் ரன் அவுட் ஆகவில்லை என்றால் கண்டிப்பாக வெற்றி பெற்றிருப்போம் என கூறுகிறார்கள்.