ஏன்மா நாங்க கதறிக்கிட்டு இருக்கோம் இப்ப வந்து சொல்றீங்களே.! தோனி ஓய்வு பற்றி அவரின் மனைவி சாக்ஷி

0
dhoni
dhoni

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் முன்னணி வீரருமான தோனி இந்திய அணிக்காக பல வெற்றிகளை கொடுத்துள்ளார், 2007 ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் இந்திய தோற்ற பிறகு இளம் கேப்டனாக மகேந்திரசிங் தோனி பொறுப்பேற்றார். இவர் பொறுப்பேற்றதும் அதே ஆண்டு டி20 உலகக் கோப்பை போட்டியில் கோப்பையை வென்று கொடுத்தார்.

இந்த வருடம் உலக கோப்பை போட்டியில் இந்தியா அரையிறுதி வரை சென்று தோற்று வெளியேறியது, இந்த உலகக் கோப்பை போட்டிக்கு பிறகு தோனி தனது ஓய்வை அறிவிப்பார் என பலரும் எதிர்பார்த்தார்கள், ஆனால் தோனி இதுவரை தனது ஓய்வை அறிவிக்கவில்லை.

மேலும் சமீபத்தில் தோனி 7 மணிக்கு செய்தியாளர்களை சந்திப்பார் என்றும் அப்பொழுது தனது ஓய்வு பற்றி பேசுவார் என்றும் கூறப்பட்டது. அதுமட்டுமில்லாமல் விராட்கோலி தோனியை திடீர் என புகழ்ந்தார், புகழ்ந்து தனது ட்விட்டரில் பதிவு ஒன்றை போட்டார். இதை பார்த்த தோனி ரசிகர்கள் தோனி தனது ஓய்வு பெறப் போகிறார் என்ற கேள்வி அனைவரிடமும் இருந்தது, இது சமூக வலைத்தளத்தில் அதிகமாகப் பகிர்ந்து சென்றார்கள்.

அதேபோல் ட்விட்டரில் உலக அளவில் ட்ரெண்ட் ஆனது தோனி ரசிகர்கள் டோனி ஓய்வு பெறக்கூடாது என அனைவரும் கோரிக்கை வைத்தார்கள். அதுமட்டுமில்லாமல் இந்த செய்தி உண்மையாக இருக்கக்கூடாது என கூறினார்கள். ஏழு மணிக்கு தோனி  பத்திரிகையாளர் சந்திப்பு என ரசிகர்கள் அனைவரும் காத்திருந்தார்கள், ஆனால் தோனி பேட்டி கொடுப்பதாக எந்த தகவலும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.

இதுகுறித்த தோனியின் மனைவி சாக்ஷி தனது டுவிட்டரில் பதிவு ஒன்றை பகிர்ந்தார் அதில் மூன்றே வார்த்தையில் ‘இதை வதந்தி என்பார்கள்’ எனக்கூறினார். இதை பார்த்த தோனி ரசிகர்கள் அனைவரும் நிம்மதி அடைந்தார்கள், எது எப்படியோ அந்தோணி ஓய்வு பெறவில்லை என்பதை அறிந்த ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.