தோனியை வீட்டிற்கு போக சொல்ல எவனுக்கும் தகுதி இல்லை பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் கொந்தளிப்பு.!

0
dhoni
dhoni

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி சர்வதேச கிரிக்கெட்டில் வெற்றி நாயகனாக திகழ்ந்தவர், இவர் தற்பொழுது கோலி தலைமையில் உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்காக விளையாடி வந்தார், பின்வரிசையில் விளையாடும் தோனி கடந்த சில போட்டிகளில் சரியாக விளையாடததால்  தோனியை ஆமை வேகம் ஆட்டக்காரர் ஃபினிஷிங் திறமை போய்விட்டது இனி வீட்டுக்கு கிளம்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது என பலர் விமர்சித்தார்கள்.

இதனை பார்த்த பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் டோணிக்கு ஆதரவாக பேசினார்கள், மேலும் நியூசிலாந்து அணிக்கு எதிரான தோனியின் விளையாட்டு அனைவரையும் கவர்ந்து விட்டது இதனால் தோனியை இன்னும் புகழ்ந்து வருகிறார்கள். உலக கோப்பை போட்டிக்கு பிறகு தோனி தனது ஓய்வு அறிவிப்பார் என கூறினார்கள், ஆனால் இது குறித்து மவுனம் காத்து வருகிறார் தோனி.

இந்த நிலையில் ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் கேப்டன் ஸ்டீவ் வாக்  தோனியை வீட்டுக்கு போக சொல்ல எவனுக்கும் தகுதி இல்லை என காட்டமாக பேசியுள்ளார், மேலும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தோனி மிகச் சிறந்த வீரர் அதுமட்டுமில்லாமல் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் ரன் அவுட் ஆகும் வரை போட்டியை இந்தியா வசம் இழுத்தவர் தோனி இவ்வளவு மிகச்சிறந்த வீரரை என்ன செய்கிறார் என்று சந்தேகப்படக்கூடாது அவர் களத்தில் இருந்தால், எதிரணிக்கு எப்பொழுதும் சிக்கல்தான் இந்த நம்பிக்கை எப்பொழுதும் இருக்கிறது என்றார்.