தோனி ஓய்வு பெறுவது எப்பொழுது.? சொல்லி அடிக்கும் கில்லி ஜோதிடர்

0
dhoni retire
dhoni retire

இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் இந்தியா அரையிறுதி வரை சென்று தோற்றுப்போனது, உலக கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணி தான் வென்றது, இந்த நிலையை இந்த உலகக்கோப்பை போட்டி பற்றி பிரபல ஜோதிடர் பாலாஜி அரையிறுதியில் இந்தியாவும் நியூசிலாந்து அணியும் மோதும் அதேபோல் இறுதி போட்டியில் நியூசிலாந்து அணி பங்கேற்கும் என கணித்துக் கூறினார்.

உலக கோப்பை தோல்விக்கு பிறகு தோனி எப்பொழுது ஓய்வு அறிவிப்பார் என பல பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், இந்த நிலையில் தோனி ஓய்வு பற்றி பிரபல ஜோதிடர் பாலாஜி ஹாசன் கணித்துள்ளார்.

அவர் கூறியதாவது தோனி உடனே ஓய்வு பெறுவதற்கு வாய்ப்பு இல்லை, தோனியின் ஜாதகப்படி லக்னாதிபதி தனுசு ராசியில் இருப்பார், அந்த தனுசு ராசியில் இருக்கிற கோச்சார குரு அக்டோபரில் பெயர்ச்சியாகிறார். அதன் பிறகு குரு பெயர்ச்சிக்கு பிறகு தனது ஓய்வை அறிவிப்பார், நவம்பர் டிசம்பருக்கு அடுத்து தான் வரும் அப்பொழுதுதான் ஓய்வு பற்றி அறிவிப்பார், அப்படி இல்லையென்றால் உலக கோப்பை டி20 பிறகு தனது ஓய்வு பற்றி அறிவிப்பார், இன்னைக்கும் நாளைக்கும் என்பது போல் ஜாதகப்படி கிடையாது எனக் கூறியுள்ளார்.

மேலும் ஆடி 31க்கு பிறகு ஆவணி, புரட்டாசியில் அறிவிப்பு வெளியாகும் எனக்கூறிய அவர் கண்டிப்பாக இந்த ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் இந்த உள்ளாட்சித் தேர்தலில் DMK தான் 10 மாநகராட்சிகளிலும் பெரும்பான்மையான வித்தியாசத்தில் வெற்றி பெறும் என அதுமட்டுமில்லாமல் ஸ்டாலின் முதலமைச்சராக ஆவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறினார்