தோனி ரெய்னாவுக்கு வலையை வீசும் பிரபல அணிகள்.. ரகசியமாக நடக்கும் பேச்சு வார்த்தைகள்.!

0

சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி, சுரேஷ் ரெய்னா மற்றும் யுவராஜ் சிங் ஆகியோர் பிக் பாஷ் t20 லீக் போட்டியில் விளையாட வைக்க ரகசியமாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆண்டுதோறும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் சார்பில் பிக் பாஷ் t20 போட்டியை நடத்தி வருகிறார்கள், ஆனால் இந்த வருடம் கோரோனோ ஊரடங்கு காரணமாக போட்டி மிகவும் தாமதமாக நடைபெற இருக்கின்றன, இந்த வருடம் டிசம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் போட்டியை தொடங்கியிருக்கிறது ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம்.

அப்படி இருக்கும் வகையில் இந்த வருடம் பிபிஎல் தொடரில் சுவாரஸ்யத்தையும் திரில்லரையும் அதிகப்படுத்துவதற்காக வெளிநாட்டு வீரர்களை களத்தில் இறக்க முடிவு செய்துள்ளது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம். அதனால் ஒவ்வொரு அணியும் 11 பேர் கொண்ட அணியில் 3 வெளிநாட்டு வீரர்களை சேர்த்துக் கொள்ளலாம் என அனுமதி வழங்கியுள்ளது.

அதனால் இந்தியாவின் நட்சத்திர நாயகனான தோனி, ரெய்னா, யுவராஜ் சிங் ஆகியோர்களை பிக் பிஷ் லீக்கில் விளையாட வைக்க ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ரகசியமாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் தோனி மற்றும் ரைனா இருவரும் சமீபத்தில் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்று விட்டார்கள் யுவராஜ்சிங் கடந்த வருடமே ஓய்வை அறிவித்து விட்டார், ஓய்வை அறிவித்த வீர்கள் மற்ற நாட்டில் விளையாட கிரிக்கெட் வாரியம் தடை விதிக்க முடியாது என்பதால் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

அதேபோல் இதற்கு முன் யுவராஜ் சிங் பிபிஎல் லீக் போட்டியில் விளையாட அதிக ஆர்வம் இருப்பதாக கூறியிருந்தார், ஆனால் தோனி மற்றும் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இந்த வருடம் இடம் பெற்றிருந்ததால் லீக் போட்டியில் விளையாடுவதற்கு பிசிசிஐ தடையில்லா சான்று வழங்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஏனென்றால் அவர்கள் தடையில்லா சான்று வழங்கினால் மட்டுமே தோனி மற்றும் ரெய்னா பிபிஎல் போட்டியில் விளையாட முடியும், ஆனால் இந்த வருடம் சிஎஸ்கே அணயில் இருவரும் இடம் பெற்றிருப்பதால் அனுமதி கிடைக்குமா என்பது கேள்விக்குறிதான்.