ஓய்வுக்கு பிறகு அரசியலுக்கு வருகிறாரா தோனி? சிக்ஸ் அடிக்க ரெடியாகும் பாஜக

0
113

தோனி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு அரசியலில் நுழைய இருப்பதாக பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சஞ்சய் பாஸ்வான் கூறியுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனி இங்கிலாந்தில் நடக்கும் உலக கோப்பை போட்டிக்கு பிறகு தனது ஓய்வு அறிவிப்பார் என பலரும் கூறி வந்தார்கள் இந்தநிலையில் நியூசிலாந்து அணியிடம் இந்தியா அரையிறுதிப் போட்டியில் தோற்றதால் தனது ஓய்வு குறித்து எப்பொழுது வேண்டுமென்றாலும் கூறலாம் என கூறப்படுகிறது.

இப்படியிருக்க அவ்வாறு ஓய்வு பற்றி தெரிவித்தால் தோனி அடுத்ததாக அரசியலில் நுழைய வாய்ப்பு இருப்பதாக பாஜக மூத்த தலைவர் சஞ்சய் பஸ்வான் கூறியுள்ளார், அவர் கூறியதாவது தோனி நரேந்திர மோடி அணியின் ஒரு பகுதியாக தனது புதிய இன்னிங்சை தொடங்கலாம் தோனி காவிநிறக் கட்சியில் சேரலாம் இது குறித்து பல நாட்களாக விவாதம் நடைபெற்று வருகிறது இருப்பினும் அவர் ஓய்வு பெற்ற பின்னரே இந்த முடிவை எடுப்பார் என கூறியுள்ளார், தோனியை நீண்டகாலமாக நான் அறிவேன், அவர் ஓய்வு பெற்ற பிறகு காவி நிற கட்சியில் இணைவார் என்ற நம்பிக்கை இருக்கிறது, அவரைக் கட்டுக்குள் கொண்டு வர நீண்ட நாட்களாக யோசனை செய்து இருக்கிறோம் என கூறினார்.