தோனி ஒன்றும் சிறந்த கேப்டன் கிடையாது.! அவரை விட கில்லாடி கேப்டன்களை நாம் பெற்றிருக்கிறோம் முன்னால் கிரிக்கெட் வீரர் அதிரடி.!

0
dhoni caption
dhoni caption

இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டிக்கு பிறகு தோனி தனது ஓய்வை அவரே அறிவிப்பார் என அனைவரும் எதிர் பார்த்தார்கள், ஆனால் ஓய்வு பற்றி இதுவரை வாய் திறக்காமல் மவுனம் காத்து வருகிறார் தோனி, அதனால் பிசிசிஐ தரப்பிலிருந்து நெருக்கடி கொடுக்கப்படுகிறது தோனிக்கு.

பிசிசிஐ கொடுக்கும் நெருக்கடியில் தோனியா அறிவிப்பது போல் தெரியவில்லை அதனால் தோனி இந்திய அணியில் ஆடும் லெவனில் இருக்க மாட்டார் என்பதை பிசிசிஐ இலைமறைகாயாக தெரிவித்து வரும் நிலையில், இதுபற்றி முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் கூறியதாவது தோனிக்கு அணியில் இடம் இல்லை என்றால் அதை நேரடியாக அவரிடம் தெரிவிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

இந்திய அணியில் தோனி பங்களிப்பு மிகப்பெரியது அதனால் பிசிசிஐ தோனி விவகாரத்தில் அதிரடி காட்ட முடியாமல் மழுப்பி வருகிறது, உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி தோற்றதால் அடுத்த உலகக் கோப்பை போட்டிக்கு அணியை தயார்படுத்த வேண்டும் என்ற நிலை பிசிசிஐக்கு இருக்கிறது, ஆனால் தோனி வழிவிட்டால் தான் இந்திய அணியில் அடுத்த விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனை அடையாளம் காண முடியும், இந்த வகையில் ரிஷப் பாண்டுக்கு தான் அதிக வாய்ப்பு இருக்கிறது.

ஆனால் தோனி வழிவிட்டால் மட்டுமே அடுத்த உலகக் கோப்பை போட்டிக்கு அணியை தயார் செய்ய முடியும், தோனியோ கொஞ்சம்கூட மசியவில்லை, இது போல் பெரிய வீரர்கள் அவர்களின் ஓய்வு விஷயத்தில் எப்பொழுதும் விவகாரமாக தான் ஆகிவிடுகிறது, இதற்கு முன் சச்சின் டெண்டுல்கர் விஷயத்திலும் இப்படித்தான் இப்பொழுது தோனி விஷயத்திலும் அதுதான் நடக்கிறது.

இதுபற்றி கம்பீர் கூறியதாவது தோனி இந்திய அணிக்கு மூன்று விதமான சர்வதேச கோப்பைகளிலும் வென்று கொடுத்துள்ளார், உலக கோப்பையை வென்று கொடுத்ததால் தோனி மிக சிறந்த கேப்டனாக பலர் பார்வைக்கு இருக்கலாம் ஆனால் தோனி மிகச் சிறந்த கேப்டன் என்பது ஏற்றுக்கொள்ள முடியாது அவரை விட மிக சிறந்த கேப்டன்களை நாம் பெற்றிருக்கிறோம் என கௌதம் கம்பீர் அதிரடியாக கூறியுள்ளார். தோனி ஓய்வு பற்றி ஒரு விவாதத்தில் பேசும் போது கௌதம் கம்பீர் இந்த கருத்தையும் கூறியுள்ளார்.

தோனி புள்ளிவிவரங்கள் அடிப்படையில் சிறந்த கேப்டன் என்றால் அதற்காக மற்ற கேப்டன் அனைவரும் அவரைவிட தாழ்ந்தவர்கள் கிடையாது, கங்குலி கேப்டன்ஷிப்பில் வெளிநாடுகளில் வெற்றி பெற்றிருக்கோம். அதேபோல் கோலி தலைமையிலான இந்திய அணி பல வெற்றிகளை கொடுத்துள்ளார்,தோனி ஜூன் 2007 இல் t20 போட்டிகளிலும் 2011 இல் ஒரு நாள் போட்டிகளிலும் கோப்பையை வென்று கொடுத்துள்ளார்.

கோப்பையை வென்றதற்காக அனைத்து பெருமைகளையும் அவரிடமே கொண்டு சேர்க்க முடியாது அதேபோல் தோல்வியடைந்தாலும் அவர் மீது மட்டுமே விமர்சனங்களை வைக்க முடியாது. அதேபோல் அனில் கும்ப்ளே நீண்டகாலம் கேப்டன்சியில் செய்யாவிட்டாலும் அவர் நல்ல கேப்டன் தான். அது மட்டுமில்லாமல் ராகுல் டிராவிட்டும் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரை வென்று இருக்கிறார். எனவே தோனி தான் சிறந்த கேப்டன் என்று நாம் கூற முடியாது அவரை விட சிறந்த கேப்டன்களை நாம் பெற்றிருக்கிறோம் என அதிரடியாக கௌதம் கம்பீர் தனது கருத்தை கூறியுள்ளார்