தோனியின் நம்பர் 7 யாருக்கு.? ஐசிசி-யின் அதிரடி அறிவிப்பு

0
dhoni no 7
dhoni no 7

Dhoni : ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியா வெஸ்ட் இண்டீஸ் இடையேயான போட்டி விரைவில் தொடங்க இருக்கிறது, இந்த அணிக்காக ஜெர்ஸி வடிவமைக்கப்பட்டுள்ளது, முன்பு இருந்த ஸ்பான்சர்கள் சிலர் மாறிவிட்டார்கள் அதனால் புதிய ஆடையில் தோனியின் நம்பர் மற்றவர்களுக்கு வழங்கப்படுமா என்ற கேள்விக்கு icc பதில் அளித்துள்ளது.

இந்திய அணியில் வெற்றி கேப்டனாக வலம் வந்தவர் தோனி, இவர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகிக் கொண்டார், அதனால் ஒருநாள் போட்டிகளிலும், டி20 போட்டிகளில் விளையாடி வருகிறார், டெஸ்ட் போட்டியில்  விலகிக் கொண்டதால் இவரின் ஜெர்சி நம்பர் 7 என்ற என்னை மற்றவர்களுக்கு கொடுக்கப்படுமா என்ற கேள்வி ஐசிசிக்கு வந்தது.

அதேபோல் ஐசிசி கூறியதாவது ஒருநாள் போட்டிகளில் விளையாடும் வீரர்களில் ஆடை எண்களை டெஸ்ட் போட்டிகளுக்கு வழங்கப்படும், ஆனால் தோனியின் நம்பர் 7 வேற எந்த வீரர்களுக்கும் கொடுக்கப்படாது என கூறியுள்ளார்கள் அதுமட்டுமல்லாமல் அவருக்கு கொடுக்கும் மரியாதையாகும்.

ஏற்கனவே சச்சின் ஓய்வு பெற்ற பொழுது சச்சினின் நம்பரை எந்த வீரர்களுக்கும் கொடுக்கவில்லை அதேபோல் தோனியின் ஏழாம் நம்பர் இனி எந்த வீரர்களுக்கும் வழங்கப்படாது என கூறியுள்ளார்கள் இந்த செய்தி தோனி ரசிகர்களிடம் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.