ராணுவ உடையில் காரில் இருந்து இறங்கும் தோனி.! வைரலாகும் வீடியோ

0

Dhoni : இந்திய கிரிக்கெட் அணி வீரர் முன்னாள் கேப்டனுமான தோனி ராணுவ பயிற்சி மேற்கொள்ள சென்றுள்ளார், இந்த நிலையில் இவர் ராணுவ உடையுடன் அவர் காரில் இருந்து இறங்கும் வீடியோ ஒன்று வெளியாகி வைரல் ஆகியுள்ளது.

இந்திய ராணுவத்தில் தோனி கவுரவ லெஃப்டினன்ட் கர்னலாக இருக்கிறார், இந்த நிலையில் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் செல்ல இருக்கிறது, ஆனால் தோனி இதை தவிர்த்து விட்டு ராணுவ வீரர்களுடன் இணைந்து பயிற்சி மேற்கொள்ள இருக்கிறார். இதற்காக இந்திய ராணுவம் அவருக்கு அனுமதி வழங்கியுள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில்  இராணுவ உடையுடன் தோனி காரிலிருந்து கம்பீரமாக இறங்கி சல்யூட் அடிக்கும் வீடியோ இன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது, இந்த வீடியோவை  ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து வருகிறார்கள்.