நீங்க ஒன்னும் இளம் வீரர் கிடையாது உங்களுக்கு வயசு ஆகிடுச்சு கொஞ்சமாவது மூளையை யூஸ் பண்ணி விளையாடுங்க.! தோனிக்கு அட்வைஸ் செய்த முன்னாள் வீரர்

0

இந்த வருடம் ஐபிஎல் சீசன் கொஞ்சம் தாமதமாக தான் தொடங்கியது, அதற்கு காரணம் கொரனோ அச்சுறுத்தல் தான், இருந்தாலும் வெளிநாடுகளில் ஐபிஎல் போட்டி மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. ஆனால் ஒரே ஒரு கவலை என்னவென்றால் ஐபிஎல் போட்டியை நேரில் காண அனுமதி இல்லை என்பது தன்.

ஆனால் ரசிகர்கள் தொலைக்காட்சியில் ஐபிஎல் போட்டியை பார்த்து கண்டுகளித்து வருகிறார்கள். இந்த நிலையில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த வருடம் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது, இதுவரை விளையாடிய 9 போட்டிகளில் வெறும் மூன்று இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது அதனால் புள்ளி பட்டியலில் 7வது இடத்தைப் பிடித்துள்ளது சென்னை அணி.

சென்னை அணியின் மோசமான விளையாட்டு ரசிகர்களுக்கு கவலையை கொடுத்துள்ளது, மேலும் மீதமிருக்கும் 5 போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு வந்தது.. இந்த நிலையில் நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் சென்னை அணி ஆடியது அதில் சென்னை அணி மீண்டும் தோல்வி அடைந்தது. இதற்கு முன் ஐபிஎல் தொடர் போட்டியில் சென்னை அணியில் கேப்டன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.

அதுமட்டும் இல்லாமல் ஒரு போட்டியில் தோனி ஓட முடியாமல் மிகவும் சோர்வாக நிற்பது போன்ற புகைப்படமும் இணையதளத்தில் வைரல் ஆனது தோனிக்கு மிகவும் வயதாகி விட்டது எனவும் சென்னை அணியை அவரால் முந்தைய சீசன் களை போல வழி நடத்த முடியவில்லை எனவும் ரசிகர்கள் உட்பட கிரிக்கெட் வீரர்களும் விமர்சனம் செய்து வந்தார்கள்.

அப்படி இருக்கும் வகையில் முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஜாவித் மியாண்டட் தோனி குறித்து கூறுகையில் என்னுடைய மூளையை பயன்படுத்தித்தான் நீண்டகாலம் கிரிக்கெட்டில் விளையாடி வந்தேன் அதேபோல் தோனியும் தனது மூளையை பயன்படுத்தி ஆடினால் எத்தனை வயது ஆனாலும் கிரிக்கெட் ஆடலாம் பழையபடி தோனி ஆட முடியவில்லை என்றாலும் அவரால் அணிக்கு நல்ல பலன் நிச்சயம் இருக்கிறது.

தோனி நெடுநேரம் உடற்பயிற்சியும் நடைப் பயிற்சியும் செய்ய வேண்டும் அது மட்டுமில்லாமல் தோனி இதற்கு முன் ஒரு மணி நேரம் பேட்டிங் பயிற்சி செய்திருந்தால் இனிவரும் காலங்களில் இரண்டு மணி நேரம் பேட்டிங் பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என அவருக்கு அட்வைஸ் கூறியுள்ளார்.