ஐபிஎல் முன்னதாகவே கேப்டன் ஆகும் தோனி.! சிஎஸ்கே ரசிகர்கள் மகிழ்ச்சி.!

தோனி அவர்கள் ஐபிஎல் க்கு முன்னதாக கிரிக்கெட் விளையாட உள்ளார் என புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. ஆசிய லெவனில் இந்திய அணியின் முன்னணி வீரர்கள் 5 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்திய நட்சத்திர வீரரான ரோகித் சர்மா விராட் கோலி, ஹர்டிக் பாண்டியா, பும்ரா மற்றும் தல தோனி போன்ற வீரர்கள் இந்திய அணியில் இருந்து விளையாட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிசிசிஐயின் தலைவரான கங்குலி அவர்கள் உலக லெவன் மற்றும் ஆசிய லெவன் ஆகிய போட்டிகளை இந்தியாவில் உள்ள மிகப் பெரிய ஸ்டெடியாக கட்டப்பட்டுள்ளதாக அகமதாபாத்தில் போட்டியை நடத்த திட்டமிட்ட நிலையில் காலதாமதம் போட்டியை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் இதனை நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி மார்ச் 18ஆம் தேதி முதல்  T20 மார்ச் 21 இரண்டாவது T20  நடைபெற உள்ளது இரண்டு போட்டிகளும் டக்கா மைதானத்தில் நடைபெற உள்ளது.

ms dhoni
ms dhoni

எனவே தோனி அவர்கள் ஆசிய லெவனில் தேர்வாகியது உறுதியாகி உள்ளது ஆனால் இப்போட்டியில் யார் கேப்டனாக செயல்படுவது என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகாத நிலையில் உள்ளது. ஆனால் ரசிகர்கள் தோனி கேப்டன் செய்ய வேண்டுமென எதிர்பார்க்கிறார்கள்.

Leave a Comment