ஐபிஎல் ஆல் ஸ்டார் கிரிக்கெட்டில் தோனி கேப்டன்ஷிப் ஆவாரா.?

8 அணிகள் கொண்ட ஐபிஎல் வீரர்களை இரு அணிகளாக பிரிக்கப்படுகின்றன
நார்த் ஈஸ்ட் ஒரு அணியாகவும் மற்றும் சௌத் வெஸ்ட் ஒரு அணியாகவும் பிரிக்கப்பட உள்ளனர்.

இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்ச் பெங்களூர்,சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஒரு அணியாகவும் மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ், கிங்ஸ் 11 பஞ்சப், ராஜஸ்தான் ராயல்ஸ் டெல்லி கேப்பிடல் ஒரு அணியாகவும் விளையாடுவார்.

நார்த் ஈஸ்ட் அணிகளுக்கான கேப்டனை தேர்ந்தெடுப்பதில் தொய்வு ஏற்பட்டுள்ளது ஏனென்றால் கடந்த மூன்று வருடங்களாக ஐசிஐசிஐ கேப்டனாக இருக்கும் விராட் கோலி கேப்டனாக தேர்ந்தெடுப்பதா அல்லது ஐபிஎல் போட்டியில் சிறப்பாக கேப்டன் செய்துகொண்டிருக்கும் ரோஹித் சர்மாவை கேப்டனாக நீடிக்க செய்வதா அல்லது ஐபிஎல் போட்டிகளில் அதிகமுறை பைனலுக்கு சென்ற சிஎஸ்கே வின் கேப்டனான தோனி தேர்வு செய்வதா என்ற சிக்கல் எழுந்துள்ளது. எனினும் அனுபவம் உள்ள தோனியை தேர்வு செய்யப்படவுள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் கூறுகின்றன.

ஏனென்றால் குறுகிய ஓவர் கிரிக்கெட்டில் நிதானமாகவும் தைரியமாகவும் சிந்திக்கக் கூடியவர் தோனி என கிரிக்கெட் ரசிகர்கள் கூறுகின்றார்கள். அவரே கேப்டனாக தேர்ந்தெடுக்க வாய்ப்பு உள்ளதாக ரசிகர்கள் கருதுகின்றனர்.
எனவே அவர் நார்த் ஈஸ்ட் அணியின் கேப்டனாக தோனி தேர்வு செய்யப்படுவார் மற்றும் சௌத் வெஸ்ட் கேப்டனாக தினேஷ் கார்த்திக் தேர்வு செயல்படுவார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Leave a Comment