விந்தணுவை தானம் செய்யும் தாராளப் பிரபுவின் திரைவிமர்சனம்.!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டார்கள் அதன் மூலம் பலரும் பட வாய்ப்புகளை பெற்று வருகிறார்கள் அந்த வகையில் ஹரிஷ் கல்யாண் கரெக்டாக பிக் பாஸ் நிகழ்ச்சியை பயன்படுத்திக்கொண்டார், பிக்பாஸ் க்கு பிறகு ஹரீஷ் கல்யாண் பியார் பிரேமா காதல் என்ற சூப்பர்ஹிட் திரைப்படத்தை கொடுத்தார், அதன்பிறகு சில திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் அந்த திரைப்படத்தின் அளவிற்கு திருப்தியைக் கொடுக்க வில்லை,. அந்த வகையில் தற்பொழுது தாராள பிரபு திரைப்படம் ரசிகர்களுக்கு திருப்தியை கொடுத்ததா என்று பார்க்கலாம்.

படத்தின் கதை.

பிரபுவாக நடிக்கும் ஹீரோ ஹரிஷ் கல்யாண் வீட்டிற்கு செல்ல பிள்ளை இவர் ஃபுட்பால் அதிக ஆர்வம் கொண்டவன், அதேபோல் அம்மா பியூட்டி பார்லர் பாட்டி இயற்கை மருத்துவத்தையும் கொண்டவர் இதுதான் இவரின் அழகான உலகம். ஹரிஷ் கல்யாண் படத்தில் எந்த ஒரு வேலைக்கும் செல்லாமல் ஜாலியாக சுற்றும் வாலிபன். ஒருநாள் தங்களின் ப்ராடக்டை டெலிவரி செய்யும்பொழுது ஹீரோயினை சந்திக்கிறார் அப்போதே அவர் மனதில் காதல் துளிர் விடுகிறது.

இந்தநிலையில் செக்ஸாலஜி டாக்டராக இருப்பவர் காமெடி நடிகர் விவேக், இவர் குழந்தைச்செல்வம் வேண்டும் பெற்றோர்களுக்கு நல்ல ஆரோக்கியமான குழந்தையை கொடுக்க வேண்டும் என்பதற்காக, ஆரோக்கியமான விந்தனு உள்ள டோனரை தேடி வருகிறார். ஒருவழியாக ஹரிஷ் கல்யாண் தான் அதற்கு சரியான ஆள் என அவரின் பின்னால் அலைந்து திரிந்து தானம் செய்ய வைக்கிறார்.

ஹரிஷ் கல்யாணத்துக்கு காதல் திருமணம் கைகூடி வருகிறது ஆனால் கணவன் மனைவியாக இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்படுகிறது, இந்த நிலையில் குழந்தை தத்தெடுப்பு அவர்கள் வாழ்க்கை செல்கிறது, குழந்தைச்செல்வம் இவர் வாழ்க்கையில் ஒரு எதிர்பாராத பிரச்சினையை ஏற்படுத்துகிறது, இந்த நிலையில் விந்தணு தானம் செய்யும் ஹரிஷ் கல்யாணுக்கு உடலில் ஏதாவது பிரச்சினையா இல்லை வேற ஏதாவதா, இப்படி சாதாரண பிரபுவாக இருந்தவர் எப்படி தாராள பிரபுவாக மாறினார் என்பதே மீதிக்கதை.

படத்தில்

நடிகர் ஹரீஷ் கல்யாண் அதிக ரசிகர்களை பெற்றவர், அதுமட்டுமில்லாமல் ரசிகைகளையும் பெற்றவர். ஹரிஷ் கல்யாண் முகத்திற்கு லவ் ரொமான்ஸ் திரைப்படங்கள் அமைந்து வருகிறது, வழக்கமாக காதல் பிரிவு என்பது போல் திரைப்படத்தில் நடித்து வந்த இவர் தற்பொழுது சற்று மாறுபட்டு விந்தணு தானம் செய்பவராகவும் நடித்துள்ளார், சிம்பிளாகவும் ஸ்டைலிஷ் ஆகவும் இவரின் நடிப்பு அனைவரையும் கவர்ந்தது.

அதேபோல் நடிகை தான்யா ஹப் ஆரம்பத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு செட்டாவாரா என பலரும் நினைத்தார்கள் ஆனால் அவருக்கு ஏற்ற ஜோடி தான் என அனைவரையும் சொல்ல வைத்துவிட்டார் இருவருக்குமிடையே லவ் ரொமான்ஸ் காட்சிகள் போரடிக்காமல் செல்கிறது. படத்தின் முக்கிய கதாபாத்திரமே கண்ணதாசன் ஆக டாக்டராக வளம் வரும் காமெடி நடிகர் விவேக் தான்.

இந்த கால தலைமுறைக்கு ஏற்றவாறு காமெடியில் அடல்ட் மிக்ஸ் செய்து கொடுத்திருப்பது வரவேற்பைப் பெற்றுள்ளது, இந்த காமெடி மூலம் தனது வயதை குறைத்து இளைஞராகி விடுகிறார். இந்த திரைப்படத்தின் மூலம் இயக்குனர் கிருஷ்ணா அறிமுகமாகியுள்ளார் ஹிந்தியில் வந்த ஹிட்டான விக்கி டோனர் என்ற ஹிட் படத்தை தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றவாறு கொடுத்துள்ளார்.

அதேபோல் தெருவுக்கு தெரு குழந்தையின்மை மருத்துவமனையில் வியாபாரம் அதிகரித்துள்ள இந்த காலத்தில் விந்தணுவின் முக்கியத்துவத்தையும், தாம்பத்திய வாழ்க்கையின் ஆரோக்கியத்தின் சிம்பிளாக கூறியுள்ளார் இயக்குனர்.

படத்தில் கலக்கலான காட்சி, ஒளிப்பதிவு, எடிட்டிங் பின்னணி இசை பாடல்கள் என அனைத்தும் ரசிக்க வைத்துள்ளது.

தாராள பிரபு : 2.75/5

Leave a Comment