100 கோடி வசூலை தாண்டிய வாத்தி.. மொத்த கலெக்ஷனை பார்த்து அதிர்ச்சியான டாப் ஹீரோக்கள்

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு ஹீரோ நடிகர் தனுஷ். இவர் ஆரம்பத்தில் காதல் சம்பந்தப்பட்ட படங்களில் நடித்து பேரையும், புகழையும் சம்பாதித்து இருந்தாலும் இவருடைய படங்கள் பெரிய அளவு வசூல் கிடைக்கவில்லை.. ஆனால் கடந்த சில வருடங்களாக நடிகர் தனுஷ் வித்தியாசமான திரைப்படங்களில் நடிக்கிறார்.

அந்த படங்கள் தான் அவருக்கு எதிர்பார்க்காத வசூலை அள்ளித் தருகிறது. அந்த வகையில் திருச்சிற்றம்பலம், நானே வருவேன் படங்களை தொடர்ந்து தனுஷ தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி உடன் கைகோர்த்து நடித்த வாத்தி திரைப்படம் பல்வேறு தடைகளை தாண்டி ஒரு வழியாக கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி கோலாகலமாக..

திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. படத்தில் தனுஷ் உடன் இணைந்து சாய்குமார், சமுத்திரக்கனி, ஆடுகளம் நரேன், சம்யுக்தா  மேனன், tanikella bharani, கென் கருணாஸ் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

படம் முழுக்க முழுக்க கல்வி சம்பந்தப்பட்ட ஒரு படமாக இருந்ததால் ரசிகர்களையும்.. தாண்டி குடும்ப ஆடியன்ஸ் மத்தியில் வரவேற்பை பெற்று அனைத்து இடங்களிலும் சூப்பராக ஓடியது அதன் விளைவாக வாத்தி திரைப்படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்தது. கடைசியாக வாத்தி திரைப்படம் உலக அளவில் 100 கோடி வசூல் செய்ததாக சொல்லப்பட்டது.

இப்படி இருக்கின்ற நிலையில்  இதுவரை வாத்தி திரைப்படம் ஒட்டுமொத்தமாக எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது. 102 கோடி வசூல் செய்துள்ளதாம். இதனால் படக்குழுவும் சரி, தனுஷும் சரி செம்ம சந்தோஷத்தில் இருக்கின்றனர். இந்த தகவல் தற்போது சோசியல் மீடியா பக்கத்தில் படும் வைரலாகி வருகிறது

Leave a Comment