முக்கிய இடத்தில் வாரிசு படத்தின் வசூல் சாதனையை முறியடித்த தனுஷின் “வாத்தி” எங்கு தெரியுமா.?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வருபவர் தனுஷ். இவர் சமீப காலமாக  தொடர்ந்து ஹிட் படங்கள் கொடுத்து வருகிறார். அந்த வரிசையில் இன்னொரு வெற்றி படத்தை கொடுக்க  தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில்  தனுஷ் நடிப்பில் உருவான வாத்தி திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம்  17 ஆம் தேதி பல தடைகளை தாண்டி வெளியானது.

படம் முழுக்க முழுக்க கல்வி சம்பந்தமான படமாக இருந்தது மேலும்  தனுஷின் சம்யுக்தா மேனன் காட்சி சிறப்பாக இருந்தது இதனால்   வெளியான வேகத்திலேயே நல்ல விமர்சனத்தை அனைவரது மத்தியிலும் பெற்றது அடுத்தடுத்த நாட்களிலும் இந்த படத்தின் விமர்சனம் சிறப்பாக இருந்த காரணத்தினால் வசூலில் அடித்து நொறுக்கியது.

வாத்தி திரைப்படத்தில் தனுஷ் உடன் கைகோர்த்து சமுத்திரக்கனி, சாய்குமார், சம்யுதா மேனன், Tanikella bharani மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் சூப்பராக நடித்திருந்தனர். வாத்தி திரைப்படம்  முதல் நாளே 10 கோடி அள்ளியதால் அடுத்த அடுத்த நாட்களிலும் வசூல் வேட்டை நடத்தியது.

இதுவரை படம் வெளிவந்து 8 நாட்கள் முடிவில் எவ்வளவு வசூல் வேட்டை நடத்தியது என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது அதன்படி பார்க்கையில் 8 நாள் முடிவில் மட்டுமே 75 கோடிக்கு மேல் வசூல் உள்ளதாம்..  வெகு விரைவிலேயே 100 கோடி கிளப்பில் வாத்தி படம் இணையும் என பலரும் அடித்து கூறி வருகின்றனர்.

மேலும் வாத்தி திரைப்படம் பல்வேறு இடங்களில் அஜித், விஜய்யின் ரெக்கார்டை முறையடித்து ஓடிக்கொண்டிருக்கிறது. ஆந்திராவில் 24.4 கோடி ரூபாய் வசூலித்து உள்ளதாம் இதன் மூலம் விஜயின் வாரிசு படத்தின் வசூலை முறையடித்து முன்னேறி இருக்கிறது. இந்த தகவலை தனுஷ் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் படும் வைரலாக்கி வருகின்றனர்.

Leave a Comment