தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பினை பெற்று வரும் திருச்சிற்றம்பலம் திரைப்படம் விஜய்யின் பீஸ்ட் திரைப்படத்தை விட அதிகம் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.மேலும் தனுஷின் திருச்சிற்றம்பலம் திரைப்படம் வெளியாகி தற்பொழுது வரையிலும் வசூல் ரீதியாக சோசியல் மீடியாவில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. இவ்வாறு நடிகர் தனுஷ் கோலிவுட்டின் மூலம் சினிமாவில் பிரபலமடைந்து தற்பொழுது ஹாலிவுட், பாலிவுட் என தொடர்ந்து நடித்து பட்டையை கிளப்பி வருகிறார்.
அந்த வகையில் இவர் நடிப்பில் வெளிவரும் திரைப்படங்களுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது தற்போது தனுஷ் நானே ஒருவன் திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தினை எஸ் கலைப்புலி தாணு அவருடைய வி க்ரியேஷன்ஸ் தயாரித்து வருகிறது. மேலும் இந்த திரைப்படத்தினை செல்வராகவன் அவர்கள் இயக்கி வருகிறார்கள்.
இந்நிலையில் கொடி திரைப்படத்திற்கு பிறகு தனுஷ் தமிழில் இரட்டை வேடத்தில் இந்த திரைப்படத்தின் மூலம் அறிமுகமாக இருக்கிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்துள்ள நிலையில் இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது மேலும் இத்திரைப்படம் கூடிய விரைவில் வேலையாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் தனுஷ் வாத்தி மற்றும் இன்னும் சில திரைப்படங்களிலும் நடிப்பதற்காக கமிட்டாகி இருக்கிறார்.
இப்படிப்பட்ட நிலை தனுஷ் நடிப்பில் வெளிவந்த திருச்சிற்றம்பலம் திரைப்படத்தினை மித்திரன் ஜகவர் அவர்கள் இயக்கியிருந்தார் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த திரைப்படத்தின் மூலம் தனுஷ் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் இருவரும் இணைந்து பாடியுள்ளார்கள். இவர்களைத் தொடர்ந்து இந்த திரைப்படத்தில் நித்யா மேனன், ப்ரியா பவானி சங்கர், ராசிக் கண்ணா,பாரதிராஜா மற்றும் பிரகாஷ்ராஜ் உள்ளிட்டவர்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.
இவ்வாறு தனுஷ் நடிப்பில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த திரைப்படம் வெளியாகி இருப்பதால் இதனை ரசிகர்கள் திருவிழாவைப் போல் கொண்டாடி வருகிறார்கள்.மேலும் இந்த திரைப்படம் ரிலீசான நாளிலிருந்து தற்போது வரையிலும் மிகப்பெரிய வெற்றினை பெற்று வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் திருச்சிற்றம்பலம் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் பீஸ்ட் இந்த திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வந்தது. இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது தனுஷின் திருச்சிற்றம்பலம் திரைப்படம் விஜயின் பீஸ்ட் பட வசூலை முறியடித்து உள்ளதாகவும் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்திருப்பதாகவும் தகவல் வெளியாகி வருகிறது.