முதல் நாளில் அதிக வசூலை ஈட்டிய திரைப்படங்கள் – லிஸ்ட்டில் இடம் பிடித்த தனுஷின் திருச்சிற்றம்பலம்.!

தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திர நடிகர்களின் படங்கள் வெளிவந்து முதல் நாளில் பிரம்மாண்டமான வசூலை அள்ளி அசத்துகிறது. அந்த வகையில் அண்மையில் வெளிவந்த படங்களும் நல்ல வசூல் வேட்டை நடத்தி உள்ளன.

தனுஷ் நடிப்பில் உருவான திருச்சிற்றம்பலம் திரைப்படம்  நேற்று திரையரங்குகளில் கோலாகலமாக ரிலீஸ் ஆகி வெற்றி நடை கண்டு வருகிறது படம் முழுக்க முழுக்க வித்தியாசமாக இருப்பதால் ரசிகர்களுக்கு ரொம்ப பிடித்து போய் உள்ளது அதிலும் குறிப்பாக நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராசி கண்ணா, பிரகாஷ்ராஜ், பாரதிராஜா மற்றும் தனுஷ் ஆகியோரின் நடிப்பு மெய்சிலிர்க்கும் வகையில் இருந்து வந்துள்ளது.

இந்தப் படத்தை மித்ரன் ஜவகர் இயக்கியிருந்தார் அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்தார் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை மிக பிரம்மாண்ட பொருள் செலவில் தயாரித்திருந்தது இந்த படம் வெளியாகி தற்பொழுது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக சிறந்து விளங்குகிறது.

முதல் நாளில் மட்டுமே தமிழகம் முழுவதும் சுமார் 9.52 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படம் பாசிட்டிவான விமர்சனத்தை பெற்றுள்ளதால் வருகின்ற நாட்களிலும் நல்ல வசூலை அள்ளி அசத்தும் என தெரிய வருகிறது இதனால் படகுழுவும் தனுஷும் செம சந்தோஷத்தில் இருக்கின்றனர்.

இப்படி இருக்கின்ற நிலையில் இந்த ஆண்டில் வெளியான படங்களில் முதல் நாளில் அதிக வசூல் செய்த படம் எது என்பது குறித்து தகவல் கிடைத்துள்ளது அதன்படி பார்க்கையில் வலிமை 36.17 கோடிகள், பீஸ்ட் – 26.40 கோடிகள், விக்ரம் – 20.61 கோடிகள், எதற்கும் துணிந்தவன் 15.21 கோடிகள், RRR – 12.73 கோடிகள், திருசிற்றம்பலம் 9.52 கோடிகள், டான் – 9.47 கோடிகள்.

Leave a Comment

Exit mobile version