நடிகர் தனுஷ் தனது சினிமா பயணத்தில் தொடர் வெற்றி படங்களை கொடுத்து முன்னணி நடிகராக வலம் வருகிறார் இருப்பினும் இவர் கடைசியாக நடித்த ஒரு சில திரைப்படங்கள் தோல்வி படங்களாக மாறின மேலும் இவரது படங்கள் ஒரு வருடத்திற்கு மேலாக திரையரங்கம் பக்கமே வெளியே வராமல் இருந்தது ரசிகர்கள் இன்னும் சோகத்தில் ஆழ்த்தியது.
இந்த நிலையில் ஜவஹர் மித்திரனுடன் கைகோர்த்து தனுஷ் நடித்த திரைப்படம் தான் திருச்சிற்றம்பலம் இந்த படம் திரையரங்கில் வெளியானதை ரசிகர்களை உற்சாகமாக வைத்தது மேலும் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று தற்போது வரை சூப்பராக ஓடுவதால் ரசிகர்கள் இந்த படத்தை என்ஜாய் பண்ணி பார்த்து வருகின்றனர்.
திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் தனுஷ் உடன் கைகோர்த்து நித்யா மேனன், ராசி கண்ணா, ப்ரியா பவானி சங்கர், பாரதிராஜா, பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் நடித்திருந்தனர் இந்த படம் சென்டிமென்ட், காதல், நண்பர்கள் எப்படி என்பதை எடுத்துரைக்கும் ஒரு திரைப்படமாக இருந்தது இந்த திரைப்படம் தற்பொழுது வரை மட்டுமே எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் கிடைத்துள்ளது.
அதன்படி பார்க்கையில் தனுஷின் திருச்சிற்றம்பலம் திரைப்படம் உலகளவில் மட்டுமே சுமார் 100 கோடி வசூல் சாதனை செய்திருப்பதாக கூறப்படுகிறது தனுஷ் திரை பயணத்தில் 100 கோடி வசூல் செய்த முதல் திரைப்படமாக தனுஷின் திருச்சிற்றம்பலம் படம் இடம்பெடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை. தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தின் வெற்றியை தொடர்ந்து அவரது கையில் வாத்தி, நானே வருவேன் ஆகிய திரைப்படங்கள் இருக்கின்றன இந்த திரைப்படங்களும் அடுத்தடுத்து வெளியாக்குவதால் அவரது மார்க்கெட் அசுர வளர்ச்சியை எட்டும் என சினிமா வட்டாரங்கள் கூறி வருகின்றனர்.