கோடிகளை அள்ளி குவிக்கும் தனுஷின் “திருச்சிற்றம்பலம் படம்” – 11 நாள் முடிவில் எவ்வளவு தெரியுமா.?

dhanush
dhanush

நடிகர் தனுஷ்  மற்ற முன்னணி நடிகர்கள் போல தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வருகிறார்.  ஆனால் இவர் சைலண்டாக இருந்து கொண்டு வெற்றி படங்களை கொடுப்பது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுக்கிறது இவர் நடிப்பில் இப்பொழுது மித்திரன் ஆர் ஜவகர் இயக்கத்தில் உருவான திருச்சிற்றம்பலம் படம்.

இந்த படத்தில் நடித்தார் இந்த படம் ரசிகர்களும், மக்களும் எதிர்பார்த்ததை விட நன்றாக இருந்ததால்  நல்ல வரவேற்பை பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது அதற்கு முழு காரணம் இந்த படம் தனுஷுக்கு ஒரு வித்தியாசமான படம் மேலும் இந்த படத்தின் கதை நண்பர்கள், அப்பா மகன், காதல் என அனைத்தையும் எடுத்துரைக்கும் ஒரு படமாக..

இது இருந்ததால் ரசிகர்களையும் தாண்டி குடும்பத்தினரை வெகுவாக இந்த திரைப்படம் கவர்ந்து இழுத்தது ஓடிக்கொண்டிருக்கிறது இந்த படத்தில் தனுஷ் உடன் கைகோர்த்து நித்யா மேனன், ப்ரியா பவானி சங்கர், ராசி கண்ணா, பிரகாஷ் ராஜ், பாரதிராஜா மற்றும் பலர் நடித்திருந்தனர் இந்த படம் தொடர்ந்து திரையரங்குகளில் ஹவுஸ்புல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இதுவரை இந்த திரைப்படம் எவ்வளவு வசூல் அள்ளி உள்ளது என்பதை குறித்தும் தற்பொழுது தகவல் கிடைத்துள்ளது அதன்படி பார்க்க இயலும் இந்த திரைப்படம் 11 நாள் முடிவில் மட்டுமே 70. 75 கோடி வசூலித்து உள்ளதாக கூறப்படுகிறது. திருச்சிற்றம்பலம் முதல் நாள்  9. 52 கோடி வசூலித்தது முதல் வார முடிவில் 51.42 கோடியும்..

இரண்டாவது வாரத்தின் முதல் நாளில் 3.47 கோடியும் இரண்டாவது நாள் 4.63 கொடியும் மூன்றாவது நாள் 5.2 கோடியும் நான்காவது நாள் 6.03 கோடியும் வசூலித்து புதிய முன்னேற்றம் அடைந்துள்ளது இதுவரை இந்த படம்  70.75 கோடி வசூலித்துள்ளது வருகின்ற நாட்களிலும் இந்த படம் நல்ல வசூலை அள்ளி ஒரு புதிய சாதனை படைக்கும் என கூறப்படுகிறது இதனால் தனுஷும் சரி, தயாரிப்பு நிறுவனமும் சரி செம்ம சந்தோஷத்தில் இருக்கிறதாம்.