தனுஷின் “நானே வருவேன்” திரைப்படம் – முதல் நாளில் உலகம் முழுவதும் அள்ளிய வசூல் இத்தனை கோடியா.?

நடிகர் தனுஷ் சினிமாவில் எப்படிப்பட்ட கதாபாத்திரம் கொடுத்தாலும் அதுவாகவே மாறியவர் நடிப்பதால் அவரது படங்கள் வெற்றி பெறுகின்றன இதனால் தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு நடிகராக அவர் இருந்து வருகிறார் தனுஷ் கடைசியாக நடித்த திருச்சிற்றம்பலம் படம் நல்ல விமர்சனத்தை பெற்று வசூலில் அடித்து நொறுக்கியது.

ஒட்டுமொத்தமாக 100 கோடிக்கு மேல் அள்ளியது இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு செல்வராகவனுடன் கைகோர்த்து தனுஷ் நடித்த திரைப்படம் தான் நானே வருவேன் இந்த படத்தை கலை புலி தாணு அவர்கள் தயாரித்திருந்தார். இந்த படத்தில் தனுசுடன் கைகோர்த்து இந்துஜா ரவிச்சந்திரன், யோகி பாபு, பிரபு, செல்வராகவன் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

படம் நேற்று கோலாகலமாக திரையரங்குகளில் வெளியானது. படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தாலும் மக்கள் கூட்டம் கூட்டமாக இந்த படத்தை பார்த்து கண்டு களித்து வருகின்றனர். இந்த படத்தில் தனுஷின் மாறுபட்ட நடிப்பு அனைவரையும் கவர்ந்து இழுத்து உள்ளது. இதுதான் இந்த படத்திற்கு பெரிய பிளஸ் ஆகவும்  பார்க்கப்படுகிறது.

இந்த படம் முதல் நாளில் மட்டுமே உலகில் 7 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. முழுவதும் எவ்வளவு வசூல் செய்தது என்பது குறித்து தகவலம் கிடைத்திருக்கிறது அதன்படி பார்க்கையில் தனுஷின் நானே வருவேன் திரைப்படம் முதல் நாளில் வெளிநாடு என அனைத்தும் சேர்த்து ஓட்டு மொத்தமாக சுமார் 13.7 கோடி வசூலித்திருக்கிறதாம்.

வெளிநாட்டில்  மட்டும் 4.07 கோடி, ஆந்திராவில் ஒரு கோடி கர்நாடகாவில் 0.47 கோடி முதல் நாளில் இவ்வளவு வசூல் அள்ளியது பெரிய விஷயம் என கூறப்படுகிறது வருகின்ற நாட்கள் விடுமுறை நாள் என்பதால் நானே வருவேன் திரைப்படத்தின் வசூல் அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது பொறுத்திருந்து பார்க்கலாம் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.

Leave a Comment