ஜப்பானில் மாஸ் காட்ட ரெடியாக இருக்கும் தனுஷின் திரைப்படம்.! இந்த இயக்குனர் இருக்கும் வரை வெற்றி மகுடம் ரஜினியின் மருமகனுக்கே..

தனுஷிற்கு எப்பொழுதும் சிறந்த படைப்புகளை கொடுத்து அவரை தமிழ் சினிமாவின் உச்சியில் வைத்து அழகு பார்த்து வருகிறார் இயக்குனர் வெற்றிமாறன்.

இவர்கள் இருவரின் கூட்டணி மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. இவரது திரைப்படங்கள் ஒவ்வொன்றும் இன்றளவும் மக்களின்ஆதரவை பெற்று உள்ளதோடு மட்டுமில்லாமல் ஃபேமஸான திரைப்படங்கள் ஆகவே இருந்து வருகின்றன அந்த வகையில் சமீபத்தில் இந்த கூட்டணி இணைந்து அசுரன் என்ற திரைப்படத்தை கொடுத்தது இந்த திரைப்படம் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று மற்றும் வசூலில் வாரி குவித்தது.

அசுரன் படத்தில் தனுஷுடன் இணைந்து மஞ்சுவாரியர் மற்றும் பல திறமையான நடிகர்கள் நடித்து இருந்தனர்.

தனுஷ் இந்த திரைப்படத்தில் வேற ஒரு அவதாரத்தில் நடித்து எடுத்திருந்தார் இந்த திரைப்படம் ஜப்பான் விருது விழா ஒன்றில் படத்தை ஒளிபரப்ப உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

Vetrimaran-and-Dhanush

ஜப்பானில் நடைபெற உள்ள சர்வதேச தமிழ் திரைப்பட விழாவில் அசுரன் திரைப்படம் தேர்வாகி தற்போது வெளியாக உள்ளது. மேலும் அசுரன் திரைப்படம் 2019 க்கான சிறந்த ஃபிட்சர் படத்துக்காக பரிந்துரைக்கப்பட்டு தற்பொழுது நாமினேட் ஆகியுள்ளது.

இந்தியாவில் நடைபெற்ற சர்வதேச விழாவில் இந்த திரைப்படமும் கோல்டன் குளோப் விருது விழாவிலும் அசுரன் திரைப்படம் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

asuran

Leave a Comment

Exit mobile version