தமிழ் சினிமாவில் 2002ஆம் ஆண்டு தனுஷ் துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் நடிக்க ஆரம்பித்து 20 வருடங்கள் கடந்துவிட்டது, இந்த நிலையில் தனுஷ் நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும், பாடகராகவும், பாடலாசிரியராகவும், இயக்குனராகவும் பல அவதாரங்களில் சினிமாவின் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.
நடிக்க வந்த 20 வருடங்கள் ஆன நிலையில் சமூக வலைத்தளத்தில் ஒரு நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவு ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது இந்த நிலையில் தனுஷ் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படம் முடிந்தவுடன் அடுத்தடுத்த படங்களில் நடிக்க இருக்கிறார்.
இந்த நிலையில் தனுஷ் 20 ஆண்டு திரைபயனத்தை கொண்டாடும் வகையில் வாத்தி படக்குழுவினர் ஒரு மாஸ் போஸ்டர் ஒன்றை இணையதளத்தில் வெளியிட்டு உள்ளார்கள். அதாவது துள்ளுவதோ இளமையில் மாணவன் தோற்றம் வாத்தி படத்தில் வாத்தி தோற்றம் ஆகிய இரண்டும் சேர்ந்தது போல் ஒரு புதிய போஸ்டரை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டராக வெளியிட்டுள்ளார்கள்.
இந்த திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடித்து வருகிறார் அதுமட்டுமில்லாமல் படத்தை அட்லூரி இயக்கி வருகிறார். ஜி வி பிரகாஷ் இசையில் உருவாகும் இந்த திரைப்படத்தை சித்தாரா என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. மேலும் இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஆகிய இரண்டு மொழிகளில் உருவாகி வருகிறது.
இந்த நிலையில் தனுஷ் 20 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் பல ரசிகர்கள் மற்றும் நடிகர்கள் நடிகைகள் என பலரும் அவருக்கு வாழ்த்துக் கூறி வருகிறார்கள்.
