இரண்டாவது நாள் வசூலில் பட்டைய கிளப்பிய தனுஷின் கர்ணன்.! இதோ வசூல் விவரம்.

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் இயக்குனர் மாரி செல்வராஜ்.  சமீப காலங்களாக இவர் இயக்கும் அனைத்து திரைப்படங்களும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அந்தவகையில் சில தினங்களுக்கு முன்பு தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் கர்ணன். இந்த திரைப்படத்தை மாரிசெல்வராஜ் தான் இயக்கி இருந்தார். இத்திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாக நல்ல வேட்டை பெற்று வருகிறது.

இத்திரைப்படத்தை கலைப்புலி எஸ் தாணு தான் தயாரித்திருந்தார். இதற்கு முன்பும்  தாணு அசுரன் திரைப்படத்தை தயாரித்திருந்தார். இத்திரைப்படம் வசூல் ரீதியாக அமோக வெற்றியைப் பெற்றதால் மீண்டும் தனுஷை வைத்து தனது இரண்டாவது படத்தையும் தயாரித்தார்.

நிலையில் இத்திரைப்படம் வெளியாகி இன்று வரையிலும் மூன்று நாட்கள் ஆகிவிட்டது .அந்தவகையில் இரண்டாவது நாளாக 51 லட்சம் வசூல் செய்துள்ளது. இந்நிலையில் முதல் மற்றும் இரண்டாவது நாளில் உலகம் முழுவதும் 1.43 கோடி வசூல் செய்துள்ளது.

ரிலீசாகி  இரண்டு நாட்களிலேயே இவ்வளவு வசூல் செய்துள்ளது என்றால் வரும் நாட்களில் மாஸ்டர் திரைப்படத்தின் வசூலையே முறியடித்து விடும் என்று கூறப்படுகிறது. தற்பொழுது தனுஷ் ரசிகர்கள்  உற்சாகத்தில்  இருந்து வருகிறார்கள்.

Leave a Comment