அசுரனை ஓவர்டேக் செய்த தனுஷின் கர்ணன் படம் : ரசிகர்களின் விமர்சனம் இதோ.

கோரோன்னா தொற்று காரணமாக ஒரு கட்டத்தில் அனைத்து துறைகளும்  மூடப்பட்டன அதில் ஒன்றாக சினிமா துறையும் பார்க்கப்பட்டது இருப்பினும் கோரோன்னா மெல்ல மெல்ல குறைய தொடங்கியது.

அதன் காரணமாக திரையரங்குகள் திறக்கப்பட்டன இருப்பினும் அரசு 50% மட்டுமே பார்க்க அனுமதி அளித்தது திறந்தால் போதும் என திரையரங்கம் நினைத்து படங்களை ரிலீஸ் செய்தது முதலாவதாக மாஸ்டர் திரைப்படம் வெளிவந்து மிகப்பெரிய வசூல் சாதனை ஈட்டியது.

அதன்பிறகு சுல்தானும் நல்ல வரவேற்பைப் பெற்ற தற்போது சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதனை அடுத்து மிகப்பெரிய எதிர்பார்கபட்ட படமாக மக்களிடம் இருந்தது தனுஷின் கர்ணன் படம் தான்.

இப்படத்தின் டீஸர் வெளியாகி மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இன்று கோலாகலமாக திரையரங்கில் வெளியானது.

மாரி செல்வராஜும் தனுஷும் முதல் முறையாக இணைவதால் படத்திற்கான எதிர்பார்ப்பு வேற லெவெலில் இருந்தாலும் படம் வென்றதா என்பதே பலருக்கும் கேள்விக்குறியாக இருந்து வந்தது.

இருப்பினும் முதல்கட்ட ஷோவை பார்த்த ரசிகர்கள் பலரும் தனது கருத்துகளையும் தனங்களையும் கீழே பகிர்ந்துள்ளனர்.

நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம் தனுஷின் கேரியரில்அசுரன் திரைப்படம் பேஸ்ட் என்று ஆனால் அந்த படத்தையே ஒரு தூசு போல ஓரம் கட்டிவிட்டது கர்ணன் இந்த திரைப்படத்தில் தனுஷ் அபார நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். அவருக்கு இன்னொரு தேசிய விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே போல பின்னணி இசையில் சந்தோஷ் நாராயணன் அசத்திவிட்டார் கர்ணன் திரைப்படம் அசுரனை விட பலமடங்கு வசூலில் வாரி குவிக்கும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த படம் நிச்சயம் முதல் நாள் வசூலில் மிகப்பெரிய வசூலை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. தனுஷ் கேரியரில் மிகவும் மறக்கமுடியாத திரைப்படமாக இருக்கும் எனவும் பலர் கூறுகின்றனர்.

Leave a Comment