தனுஷின் கர்ணன் படம்.. ரிலீஸ் தேதி மற்றும் டீசரை வெளியிட்ட படக்குழு.! கொண்டாடும் ரசிகர்கள்.

அசுரன், பட்டாஸ் போன்ற வெற்றி திரைப்படங்களை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் திரைப்படம் கர்ணன்.

படத்தின் ஷூட்டிங் தொடங்கியதிலிருந்து இத்திரைப்படத்தின் எதிர்பார்ப்பு வேற லெவல் எகிறி உள்ளது.

இயக்குனர் மாரி செல்வராஜ் பரியேறும் பெருமாள் படத்தின் வெற்றியை தொடர்ந்து முதன்முறையாக தனுஷுடன் இணைந்து கர்ணம் என்ற திரைப்படத்தை எடுத்து உள்ளார்.

இத்திரைப்படத்தை கலைப்புலி தாணு அவர்கள் தயாரித்துள்ளார். இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார்.

இப்படத்தின் ஷூட்டிங் நெல்லை அருகே செட் அமைக்கப்பட்டு எடுத்து வந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு ஷூட்டிங் அனைத்தும் முடிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் கர்ணன் படக்குழுவினர் படத்தின் ரிலீஸ் தேதி மற்றும் டீசரை வெளியிட்டுள்ளார்.

இத்திரைப்படம் வருகின்ற ஏப்ரல் மாதத்தில் வெளிவரும் என தெரிய வருகிறது. இந்த டீசரை பார்த்தால் ஒரு சாதாரண மனிதன் விலங்குகளை பாதுகாத்து வருவது போல் தெரிகிறது. நிச்சயம் இத்திரைப்படம் திரையரங்கில் வெளிவந்து மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தும் என தெரியவருகிறது. இதோ கர்ணன் படத்தின் டீசர்.

Leave a Comment

Exit mobile version