எதிர்பார்த்ததை விட இரண்டு மடங்கு பல கோடிக்கு வியாபாரமான தனுஷின் கர்ணன்.! இனி தொடமுடியாத தூரத்தில் தான்…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ் இவர் நடிப்பில் சமீபகாலமாக வெளியாகும் திரைப்படங்கள் நல்ல வரவேற்பு பெற்று வசூல் ரீதியாக வெற்றி பெற்று வருகிறது. அதிலும் இப்பொழுது திரையரங்குகளில் படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது அதற்கு காரணம் திருட்டு விசிடி பைரசி இணையதளம் தான்.

என்னதான் பைரசி இணையதளத்தை அடக்கினாலும் அவர்கள் ஏதாவது ஒரு வழியில் வெளியே வந்து படத்தை வெளியிட்டு விடுகிறார்கள். இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும்  ஒரு படத்தை ரசிகர்கள் மத்தியில் தயாரிப்பாளர்கள் எந்த அளவுக்கு பிரமோஷன் செய்கிறார்களோ அந்தப் படத்திற்கு ரசிகர்கள் கூட்டம் கூடுவது வழக்கமான ஒன்றாகும்.

அந்த வகையில் சரியான நேரத்தில் ப்ரோமோஷன் செய்து லாபம் பார்க்கும் தயாரிப்பாளர்களில் மிக முக்கியமானவர் எஸ் கலைபுலி தாணு. இவரது தயாரிப்பில் தற்போது தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் கர்ணன்.

இந்த திரைப்படத்தின் பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் நல்ல விமர்சனங்களைப் பெற்றது அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தை எஸ் கலைப்புலி தாணு இந்த திரைப்படத்தை மிகவும் கச்சிதமாக பிசினஸ் செய்துள்ளார் என கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

இந்த நிலையில் இதற்கு முன் தனுஷ் நடிப்பில் வெளியாகிய என்னை நோக்கி பாயும் தோட்டா திரைப்படமும் பட்டாஸ் திரைப்படமும் திரையரங்கில் வெளியானது ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு வசூல் ஆகவில்லை. அந்த திரைப்படங்களின் ரெவன்யூ படிப்பார்த்தால் கர்ணன் திரைப்படம் 12 முதல் 15 கோடி வரை மட்டுமே விற்க முடியும்.

ஆனால் எஸ் தாணு போட்ட பக்கா பிளான் வொர்க் அவுட் ஆகி விட்டது அதனால் இந்த திரைப்படம் 26 கோடியே 10 லட்சம் ரூபாய்க்கு விலை போகிறது. அதற்கு காரணம் கலைபுலி எஸ் தாணு விநியோகஸ்தர்களிடம் பட்டாசு மற்றும் என்னை நோக்கி பாயும் திரைப்படத்தை தவிர்த்துவிட்டு அசுரன் திரைப்படத்தின் வசூலை காட்டி கர்ணன் படத்தின் பிசினஸ்சை கன கச்சிதமாக முடித்து விட்டாராம்.

அதுமட்டுமில்லாமல் தனுஷ் அசுரன் திரைப்படம் கிட்டத்தட்ட ஒரு வாரங்களுக்கு மேல் திரையரங்கில் ஓடி 25 கோடி வரை ஷேர் கொடுத்ததாக கூறப்படுகிறது அதனால்தான் அசுரன் திரைப்படத்தை வைத்து கர்ணன் திரைப்படத்தின் பிசினஸை முடித்து விட்டாராம்.

மேலும் கர்ணன் திரைப்படத்தை விநியோகஸ்தர்களிடம் இருந்து அட்வான்ஸ் மட்டும் வாங்கிக்கொண்டு சொந்தமாக ரிலீஸ் செய்ய முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அந்தவகையில் கர்ணன் திரைப்படம் தமிழ்நாடு தியரிட்டிகள் பிசினஸ் இதோ.

சிட்டி ( பிவிஆர் சினிமா)- 3 கோடி, செங்கல்பட்டு ( மால் தியேட்டர் பிவிஆர், சிங்கிள் தியேட்டர்ஸ் அருள்பதி)- 6 கோடி, வட ஆற்காடு (கேலக்ஸி பிக்சர்ஸ் வேலூர்)- 1.60 கோடி, தென் ஆர்க்காடு (5 ஸ்டார் செந்தில்)- 1.80 கோடி, கோவை (ராஜமன்னார்)- 4.50 கோடி, திருச்சி (ராக்போர்ட் முருகானந்தம்)- 3 கோடி, சேலம்- 1.75 கோடி
மதுரை- 2.75 கோடி, திருநெல்வேலி (ஜான் பிலிம்ஸ்)- 1.70 கோடி, மொத்த அட்வான்ஸ்- 26.10 கோடி

இதனைத் தொடர்ந்து கேரள ரிலீஸ் உரிமை, கர்நாடகா ரிலீஸ் உரிமை, தெலுங்கு டப்பிங் உரிமை, ஹிந்தி டப்பிங் உரிமை, சாட்டிலைட் உரிமை, ஆடியோ உரிமை என பல ஏரியாக்களில் வசூல் வேட்டை நடத்த இருக்கிறார்கள். இதனை அனைத்தையும் வைத்துப் பார்த்தால் தயாரிப்பாளர்  கலைப்புலி தாணுவிற்கு கிட்டத்தட்ட 25 கோடி லாபம் கிடைக்கும் என தெரிகிறது.

Leave a Comment