தனுஷின் “கர்ணன்” தெலுங்கு பட ரீமேக்கை கைப்பற்றிய பிரபல தயாரிப்பாளர்.? நடிக்க போற ஹீரோ யார் தெரியுமா.? ஷாக்கிங் நியூஸ்.

0

தனது ஆசாரமான நடிப்பின் மூலம் இந்தியா முழுவதும் பேசப்படும் நபராக மாறியுள்ளார் நடிகர் தனுஷ். தொடர் ஹிட் படங்களை கொடுப்பதோடு அத்தகைய படங்கள் ஒவ்வொன்றும் விருதுகளை வாறி குவிப்பதால் தற்பொழுது தொட முடியாத உச்சத்தில் இருக்கிறார். மேலும் தற்போது படவாய்ப்புகள் தமிழையும் தாண்டி பிற மொழிகளான ஹாலிவுட், ட கோலிவுட், பாலிவுட் என பிற மொழிகளிலும் படங்கள் குவிந்த வண்ணமே இருக்கின்றன.

இருப்பினும் அந்த திரைப்படங்களில் தனது அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி அடுத்த லெவலுக்கு செல்ல தனுசும் ரெடியாக இருக்கிறார். அந்த வகையில் ஆங்கிலத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார் அதை தொடர்ந்து தமிழில் அடுத்தடுத்த திரைப் படங்களில் நடிக்கிறார் இதற்கிடையே இந்தியிலும் ஒரு படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார் என்பது கூடுதல் தகவல்.

இதற்கிடையே தனுஷின் கர்ணன் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் உச்சத்தை வருகிறது. இதனால்தான் கர்ணன் படக்குழு மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறது. இதை தொடர்ந்து மீண்டும் மாரி செல்வராஜும் தனுஷூம்ஒரு புதிய படத்தில் இணைய உள்ளனர். இதனால் ரசிகர்கள் தற்பொழுது சந்தோஷத்தின் உச்சியில் இருக்கின்றனர்.

அசுரன் திரைப்படம் தமிழில் வெளியாகி மாபெரும் வெற்றி அடைந்ததை தொடர்ந்து தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டது அதேபோல தற்போது தனுஷின் கர்ணன் திரைப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட உள்ளது கர்ணன் பட  தெலுங்கு ரீமேக் உரிமையை தயாரிப்பாளர் பெல்லம்கொண்டா சுரேஷ் என்பவர் கைப்பற்றியுள்ளார்.

இந்த படத்தில் அவரது மகன் “பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ்” ஹீரோவாக நடிக்க இருப்பதாக தகவல்கள்வெளி வருகின்றன. அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் தகவல்கள் கசிகின்றன.

கர்ணன் படத்தில் தனுஷின் நடிப்பு அபாரமாக இருந்தது அதை விட ஒரு மடங்கு சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினால் மட்டுமே இந்த படம் ஓடும் என சினிமா பிரபலங்கள் பலரும் கூறுகின்றனர் இவர் அந்த அளவிற்கு நடிப்பாரா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.