தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் தனுஷ். சமீபகாலமாக ஒரு வருடத்திற்கு 2 அல்லது 3 சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து மக்களை மகிழ்வித்து வருகிறார் மேலும் அந்த திரைப்படங்கள் சிறப்பான விமர்சனத்தையும், வசூல் வேட்டையையும் கொடுத்து வருவதால் தற்போது இவரை வைத்து படம் இயக்க இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர்.
மேலும் மற்ற மொழிகளிலும் இவரது திறமையை பார்த்து அழைக்கின்றனர் அந்த வகையில் ஹாலிவுட், ஹிந்தி ஆகிய அனைத்து மொழிகளிலும் கால்தடம் பதித்த வெற்றி கண்டு வருகிறார். தெலுங்கு சினிமாவில் கூட வெகு விரைவிலேயே காலடி எடுத்து வைத்திருக்கிறார். தனுஷ் கையில் திருச்சிற்றம்பலம், மாறன் ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கின்றன.
போதாத குறைக்கு தனது அண்ணன் செல்வராகவன் உடன் கைகோர்த்தது தற்போது நானே வருவன் என்ற படத்தில் நடித்து வருகிறார் இப்படி தொடர்ந்து பல்வேறு பட வாய்ப்புகளை வைத்து இருக்கின்ற நிலையில் சமீபத்தில் அசுரன் படத்திற்காக நடிகர் தனுஷ் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வாங்கினார்.
என்பது குறிப்பிடத்தக்கது இப்படி சினிமாவில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் தனுஷ் தனது சம்பளத்தை உயர்த்திய மாஸ் காட்டுகிறார் இருப்பினும் இவரை நம்பி தற்போது படவாய்ப்புகள் குவிந்து கொண்டுதான் இருக்கின்றன இப்படியும் ஒரு பக்கம் இருந்தாலும் மறுபக்கம் தனது குடும்பத்துடன் செம்ம ஜாலியாக வாழ்ந்து வருகிறார்.

அந்த வகையில் நேற்று தனுஷ் தீபாவளியை முன்னிட்டு தனது குடும்பத்தினரிடமும் செம்மையாக கொண்டாடியுள்ளார். அதன் புகைப்படங்கள் கூட தற்போது வெளியாகி உள்ளது தனுஷின் மகன் யாத்ரா தனுஷ் தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்து கொண்டாடியுள்ளார் மேலும் அந்த புகைப்படம் இணையதளத்தில் தீயாக பரவி உள்ளது.
