தனுஷை தெலுங்கு சினிமா பக்கம் கட்டி இழுக்கும் முக்கிய இயக்குனர்கள்.? மொத்தம் எத்தனை தெலுங்கு படத்தில் நடிக்கயுள்ளார் தெரியுமா.? முழு விவரம் இதோ.

தமிழ் சினிமாவில் பல்வேறு விதமான மக்களின் பார்வைக்கு விருந்து படைத்து உள்ளவர் நடிகர் தனுஷ் படத்தின் கதைக்கு ஏற்றவாறு தனது நடிப்பு திறமையை மாற்றிக்கொண்டு நடிப்பது அவருக்கு கைவந்த கலை. ஆரம்ப காலத்தில் இருந்தே தற்போது வரையிலும் பார்க்க முடியும் நடிகர் தனுஷுக்கு திறமை இருக்கிறது அவரால் எந்த விதமான கதாபாத்திரத்திலும் நடிக்க முடியும் என்பதை அவருக்கு புரிய வைத்துள்ளனர்.

அந்தவகையில் இயக்குனர் செல்வராகவன், வெற்றிமாறன் ஆகியோர் தனுஷின் இரு பக்கங்களாக இருக்கின்றனர் தனுஷின் திறமைக்கு ஏற்றவாறு சிறப்பான கதைகளை அமைத்து கொடுத்து உள்ளனர் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் தனுஷ் சிறந்த கதைகளை சொல்லும் இயக்குனர்களுடன் தனது படத்தை எடுத்து வருகிறார்.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்து தொடர்ந்து தற்போது தெலுங்கு பக்கத்திலும் அடியெடுத்து வைத்திருக்கிறார் ஏற்கனவே இந்தி மற்றும் ஹாலிவுட் ஆகிய பக்கங்களில் சென்ற நிலையில் தற்போது தெலுங்கில் அவருக்கான வரவேற்பு அதிகரித்துள்ளது அந்த வகையில் முதன்முதலாக தெலுங்கில் சேகர் கம்முலா இயக்கும் புதிய படத்தில் அறிமுகமாக உள்ளார்.

இந்தப் படம் டிசம்பர் மாதம் ஷூட்டிங் தொடங்க இருக்கிறது. படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாக இருக்கிறது. அதன் பிறகு ரங்தே படத்தை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் அதன் அறிவிப்பு விரைவில் வரும் என கூறப்படுகிறது இதற்கிடையில் அவர் மூன்றாவதாக தெலுங்கு இயக்குனர் ஒருவரிடமும் கதை கேட்டுள்ளாராம்.

அந்த வகையில் ஆர்எக்ஸ் 100 என்ற திரைப்படத்தை எடுத்து வெற்றி கண்ட மகேஷ் பூபதி சொன்ன கதை தனுசுக்கு பிடித்துப்போகவே தற்போது அந்த கதைக்கவும் ஓகே சொல்லி உள்ளாராம்.

Leave a Comment

Exit mobile version