வெற்றிமாறனின் விடுதலை திரைப்படத்தில் திடீரென என்ட்ரி கொடுக்கும் தனுஷ்..! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவில் வெற்றி இயக்குனர் என முடி சூட்டப்பட்ட இயக்குனர் என்றால் அது வெற்றிமாறன் தான் இவ்வாறு பிரபலமான நமது இயக்குனர் சமீபத்தில் காமெடி நடிகர் சூரியை வைத்து விடுதலை என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படத்தில் ராஜு மேனன், விஜய் சேதுபதி மற்றும் சூரி போன்றவர்கள் நடித்துள்ளார்கள்.

அதுமட்டுமில்லாமல் தற்பொழுது இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷை இணைந்துள்ள செய்தி ரசிகர்கள் மத்தியில் மிக வைரலாக பரவி வருவது மட்டும் இல்லாமல் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் இந்த விடுதலை திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது.

மேலும் இந்த திரைப்படத்தின் முதல் பாகம் முடிவடைந்த நிலையில் தற்போது இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்புகள் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக பட குழுவினர்கள் தெரிவித்துள்ளார்கள் இந்நிலையில் இந்த திரைப்படத்தில் ராஜூமேனன் இணைந்த தகவல் வெளியானதை தொடர்ந்து தற்பொழுது தனுஷின் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது இந்த திரைப்படத்தில் இசைஞானி இளையராஜாவின் இசையில் கம்போஸ் செய்யப்பட்ட பாடல் ஒன்றை தனுஷ் தான் பாடியுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது அது மட்டும் இல்லாமல் இளையராஜாவின் இசையில் தனுஷ் பாடிய முதல் பாடல் என்றால் அது இந்த பாடல் தான் என ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகிறார்கள்.

dhanush-1
dhanush-1

தனுஷ் என்னவோ பாடல் தான் இந்த திரைப்படத்தில் பாடப் போகிறார் ஆனால் ரசிகர்கள் இந்த திரைப்படத்தில் தனுஷ் நடிக்க போகிறார் என எதிர்பார்ப்புடன் மட்டும் இல்லாமல் சொல்ல வரும் விஷயத்தை சரியாக கவனிக்காமல் இதனை கொண்டாடி வருகிறார்கள்.

Leave a Comment