ரோலக்ஸ் சூர்யாவுக்கு அந்த அலப்பறைனா, லியோவில் களம் இறங்கும் கொக்கி குமாருக்கு எப்படி இருக்கும்.! மிரட்டப் போகும் லோகேஷ் கனகராஜ்…

மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி அதன் பிறகு தொடர் வெற்றிகளை கொடுத்து தற்போது தயாரிப்பாளர்களால் தேடப்பட்டு வரும் இயக்குனர்களில் ஒருவர்தான் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் அறிமுகமான முதல் படமே மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதை தொடர்ந்து அடுத்ததாக கார்த்திகை வைத்து கைதி என்ற திரைப்படத்தை இயக்கினார்.

இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறவே அடுத்ததாக தன்னுடைய மூணாவது படத்தை நடிகர் விஜய்யை வைத்து இயக்கினார் இதைத் தொடர்ந்து நடிகர்கள் கமல்ஹாசன், பாகத் பாசில், விஜய் சேதுபதி, உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திர பட்டாள்கள் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.

இப்படி தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வந்த லோகேஷ் கனகராஜ் தற்போது லியோ திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்திலிருந்து தற்போது ஒரு புதிய தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அதாவது ஏற்கனவே லியோ திரைப்படத்தில் நடிகர் தனுஷ் அவர்கள் நடிக்கிறார் என்று அரசல் புறசலாக செய்திகள் உலா வந்தது. அந்த வகையில் அந்த செய்தி தற்போது உறுதியாகி விட்டதாக கூறப்படுகிறது. அதாவது விக்ரம் படத்தில் கடைசி ஐந்து நிமிடத்தில் திரையரங்கை தெறிக்கவிட்டு சூர்யாவின் ரோலக்ஸ் கதாபாத்திரத்தை விட டபுள் மடங்கு கதாபாத்திரத்தில் லியோ திரைப்படத்தில் நடிகர் தனுஷ் அவர்கள் நடிக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

இந்த கதாபாத்திரத்திற்காக நடிகர் தனுஷ் அவர்கள் 5 கோடி சம்பளமாக பேசப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது அது மட்டுமல்லாமல் இந்த திரைப்படம் விஜயின் திரை வாழ்க்கையில் மிகப் பிரமாண்டமான ஒரு படமாக அமையும் என கூறப்படுகிறது.

இது ஒரு பக்கம் இருக்க ரசிகர்கள் லோகேஷ் கனகராஜ் இடம் இன்னும் எத்தனை சஸ்பென்ஸ் தான் வைத்திருப்பார் என்று கேட்டு வருகிறார்கள் அது மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் விஜயுடன் இணைந்து திரிஷா, பிரியா ஆனந்த், சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான், உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திர பட்டாள்கள் நடிக்கின்றனர் என்று ஏற்கனவே படக்குழு அறிவித்திருக்கிறது.

இதை தொடர்ந்து அறிவிக்கப்படாத சில நடிகர்கள் இந்த திரைப்படத்தில் நடித்து வருவதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது அந்த வகையில் இந்த திரைப்படத்தில் நடிகர் கமல் மற்றும் பகத் பாஸில் நடிக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது தனுஷ் அவர்கள் கேமியோ ரோலில் நடிக்க இருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் காஷ்மீரில் படப்பிடிப்பு முடிவடையும் தருவாயில் இருப்பதாக கூறப்படுகிறது விரைவில் படக்குழுவினர் சென்னை திரும்ப இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் விரைவில் அடுத்தடுத்த அப்டேட்டைகளை லோகேஷ் கனகராஜ் விரைவில் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

Exit mobile version