சூப்பர் ஹிட் கதையை தவறவிட்ட தனுஷ் சரியாக பயன்படுத்திக் கொண்டு வளர்ந்த ஹீரோ

தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகராக ஓடுபவர் நடிகர் தனுஷ் இவர் தனது திரை பயணத்தில் ஆரம்பத்தில் பல அவமானங்களை சந்தித்து இருந்தாலும் படிப்படியாக தனது திறமையை வளர்த்து தற்போது இந்த இடத்தில் இருக்கிறார் இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த வாத்தி, திருச்சிற்றம்பலம், நானே வருவேன் போன்ற படங்கள் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில்

இன்னொரு வெற்றி படத்தை கொடுக்க கேப்டன் மில்லர் திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்tது வருகிறார் படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு முக்கிய இடங்களில் படமாக்கப்பட்டு வருகிறது இந்த படம் மிகப்பெரிய ஒரு ஆக்சன் படமாக இருக்கும் என தெரியவந்துள்ளது இப்படி இருக்கின்ற நிலையில் தனுஷ் பற்றிய செய்தி ஒன்று இணையதள பக்கத்தில் வைரல் ஆகி வருகிறது.

தனுஷ் தனது திரையுலகில் பல நல்ல படங்களை கொடுத்திருந்தாலும்.. ஒரு சில நல்ல கதைகளை சில காரணங்களால் தவற விட்டு உள்ளார் அப்படி இவர் தவற விட்ட படங்களை பிற நடிகர்கள் நடித்து தன்னை வளர்த்துக் கொண்டனர் அந்த வகையில் இயக்குனர் சுசீந்திரன் தனுஷுக்கு சொன்ன கதையை திடீரென வேறொரு நடிகரை வைத்து எடுத்து பிளாக்பஸ்டர் படமாக ஆக்கினார்

அது குறித்து விளாவாரியாக பார்ப்போம்.. இயக்குனர் சுசீந்திரன் முதலில் தனுஷுக்கு நான் மகான் அல்ல படத்தின் கதையை கூறினார்.  ஆனால் அந்த சமயத்தில் தனுஷ் மற்ற படங்களில் பிசியாக இருந்ததால் வேறு வழி இல்லாமல் நான் மகான் அல்ல படத்தின் கதையை கார்த்தி இடம் சொன்னார்

அவருக்கு ரொம்ப பிடித்துப் போகவே அது படமாக உருவாக்கியது படம் வெளிவந்து மக்கள் மத்தியில் அமோக வரவேற்ப்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் தனுஷ் ஒரு பிளாக்பஸ்டர் ஹிட் படத்தை தவற விட்டுவிட்டார் எனக்கூறி வருகின்றனர்.

Leave a Comment