தனுஷின் அந்த படம் தோல்வியை சந்திக்க காரணம் நான் இல்லை – அவரேதான் புலம்பும் பிரபல இயக்குனர்.?

சமீபகாலமாக சமூக அக்கறையுள்ள திரைப்படங்கள் பல வெளிவந்து வெற்றிநடை கqண்டுள்ளன அதிலும் குறிப்பாக தனுஷின் கர்ணன் ஜகமே தந்திரம் போன்ற படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து தனுஷ் படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

அப்படி அண்மையில் இவர் நடிப்பில் வெளியான மாறன் திரைப்படம் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் படுதோல்வி அடைந்தது.மாறன் படத்தை கார்த்திக் நரேன் இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் தனுஷுடன் கைகோர்த்து  மாளவிகா மோகனன் சமுத்திரகனி மற்றும் பல நடிகர் நடிகைகள் நடித்து அசத்தி இருந்தனர்.

மாறன் திரைப்படம் வெளிவருவதற்கு முன்பாக பர்ஸ்ட் லுக் போஸ்டர் பாடல் போன்றவை நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் படத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் நிலையில் OTT தளத்தில் வெளிவந்தது. காரணம் தனுஷ் மாளவிகா மோகனன் நடிப்பு சிறப்பாக இருந்தாலும்..

இந்த படத்தில் கதைகள் சிறப்பாக அமையாததால் படம் பெரிய அளவில் ரீச் ஆகவில்லை அதன் காரணமாகவே தோல்வியை தழுவியது.இதையடுத்து ரசிகர்கள் பலரும் டாப் நடிகரான தனுஷை வைத்து ஒரு சிறந்த படத்தை எடுத்து இருக்கலாம் ஆனால் மிஸ் செய்து விட்டீர்கள் என கமெண்ட் அடித்தனர்.

இதற்கு அவரோ இந்த படத்தின் கதை களத்தில் சில மாற்றங்களை செய்ததே தனுஷ் தான் அதனால் அந்த படத்தின் தன்மை முற்றிலுமாக மாறியது என ஒரு புதிய பதிவை போட்டு பின் சில மணி நேரத்திலேயே அதை தூக்கி விட்டார் இயக்குனர் நரேன்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment