வடசென்னை திரைப்படம் ஹிட்டான ஹாலிவுட் படத்தின் காப்பியா!!

0

Dhanush vetrimaran megahit movie vadachennai this hollywood movie copy viral: வெற்றிமாறன் 2009 ஆம் ஆண்டில் தனுஷ் நடிப்பில் வெளியான பொல்லாதவன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா துறையில் அறிமுகமானார். இந்தப் படம் வெற்றிமாறன் மற்றும் தனுஷ்க்கு மிகப்பெரிய வெற்றியை தேடித்தந்தது.

அதற்குப்பின் இவர்கள் ஆடுகளம் என்ற படத்தின் மூலம் ஒன்று சேர்ந்தனர். 2011 ஆம் ஆண்டு வெளியான இந்த ஆடுகளம் படம் தேசிய விருது பெற்றது. அதன்பிறகு 2018 ஆம் ஆண்டு வெளியான வடசென்னை என்ற படத்தின் மூலம் இருவரும் ஒன்று சேர்ந்தனர்.

இந்த படத்தில் தனுஷ் ஆரம்பத்தில் ஜெயிலுக்கு சென்று எதிரியின் குழுவில் சேர்ந்து பின் அந்த gang தலைவனை கொள்வதற்கு முயற்சி செய்வார். அதற்கு
பின் ஏற்படும் பின்விளைவுகளை அவரும், அவருடைய மக்களையும் அவர் எப்படி பாதுகாக்கிறார் என்பது தான் இதன் கதை.

இந்தப் படம் தனுஷின் வேலையில்லா பட்டதாரியை விட வசூலை மிஞ்சியது. ஆனால், இந்தப் படத்தின் கதையை ஏற்கனவே “A Prophet” எனும் ஹாலிவுட் படத்தில் வருவது போல உள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளனர். அந்தப் படம் 2009 ஆம் ஆண்டு வெளிவந்தது அதில் ஹீரோ எதார்த்தமாக ஜெயிலுக்கு செல்கிறார்,

அவர்களிடம் மாட்டிக்கொண்ட ஹீரோ அதிலிருந்து எப்படி வெளிவந்து அவர்களை எப்படி சமாளிப்பது என்பதே இதன் கதை ஆகும். இந்தக் கதையும் வடசென்னை கதையும் ஒரே மாதிரி உள்ளதாக ரசிகர்கள் புகார் அளித்து வருகின்றனர்