சொத்து மதிப்பு விஷயத்தில் அஜித்-விஜய் லெவலுக்கு உயர்ந்த தனுஷ்.? எவ்வளவு சொத்து மதிப்பு தெரியுமா.? வெளியான சூப்பர் தகவல்.

0

சினிமா எப்படிப்பட்டது என்பதை சரியாக புரிந்து கொண்டு அதற்கு ஏற்றவாறு தனது திறமையை வெளிப்படுத்தினால் மட்டுமே உச்சத்தை எட்ட முடியும் அதை சரியாக செய்து வருபவர்தான் நடிகர் தனுஷ்.

ரஜினியை போலவே மிகப்பெரிய ஒரு நடிகராக இருந்தாலும் சினிமாவில் சிம்பிளிசிட்டியாக இருந்துக்கொண்டு தனக்கான வெற்றியை தொடர்ந்து கொடுத்து வந்ததால் இவர் தொடமுடியாத உச்சத்தை எட்டி உள்ளார்.

தமிழ் சினிமாவில் தொடர்ந்து மாபெரும் ஹிட் படங்களை கொடுத்த தனுஷ் தற்போது தமிழை தாண்டி பிற மொழிகளிலும் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார் அந்த வகையில் பாலிவுட், ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார்.

இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ஜகமே தந்திரம் வெளிவந்த தனுஷ் ரசிகர்களுக்கு நல்ல தீனி போட்டாலும் மக்கள் மத்தியில் இது ஒரு கலவையான விமர்சனத்தையே பெற்றது இது ஒரு பக்கமிருக்க தனுஷ் அடுத்ததாக தனது 43, 44, கிரே மேன் என தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி உள்ளார் அப்படி பார்த்தால் இவரது கையில் இன்னும் 12 படங்கள் இருக்கின்றன.

இப்படி ஓடி கொண்டிருக்கும் தனுஷ் தனது சம்பளத்தையும் பல மடங்கு உயர்த்தியுள்ளார். இந்த நிலையில் தனுஷின் சொத்து மதிப்பு குறித்து சில தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.

தனுஷின் சொத்து மதிப்பு சுமார் 200 கோடி இருக்கும் என கூறப்படுகிறது இந்த சூழலில் அவர் 150 கோடி பட்ஜெட்டில் ஒரு புதிய வீட்டை கட்டுகிறார் இதுவும் அதனுடன் சேர்த்து பார்க்கையில் இவரது மதிப்பு வேற லெவல் இருக்கும் என கூறப்படுகிறது ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது தற்போது வரையிலும் தெரியவில்லை ஆனால் திரை வட்டாரங்களில் இதுபோன்று கூறிவருகின்றனர்.