மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்கும் தனுஷ் – ஹீரோ யார் தெரியுமா.?

சினிமாவுலகில் இசையமைப்பாளர் இயக்குனர் ஹீரோவாக மாறுவது உண்டு ஆனால் ஹீரோ இயக்குனராக மாறுவது நாம் பலருக்கும் ஆச்சரியத்தை கொடுக்கும் அந்த வகையில் தமிழ் சினிமா உலகில் தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து அசத்தி ஓடிக் கொண்டிருப்பார் நடிகர் தனுஷ்.

இப்பொழுதுகூட வாத்தி என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த நிலையில் மீண்டும்  இயக்குனராக தன்னை நிரூபிக்க ரெடியாக உள்ளார் தனுஷ் ஏற்கனவே பவர் பாண்டி எனும் திரைப்படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானார் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினியை வைத்து படத்தை இயக்க உள்ளார்.

என்று தகவல்கள் வெளிவந்த நிலையில் தற்போது வேறு ஒரு கதையை வைத்து ஒரு புதிய படத்தை இயக்க உள்ளார். அந்த படத்தின் ஹீரோ வேறு யாருமல்ல தனுஷ் தான். தனுஷ் அவர்களே இயக்கி நடிக்கவுள்ளார் இந்த படம் நிச்சயம் ஒரு வித்தியாசமான ஒரு திரைப்படமாக உருவாக உள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என கூறப்படுகிறது. தனுஷ் இயக்கும் அந்த திரைப்படத்தை தயாரிப்பாளரும் பைனான்ஷிருமான அன்புச்செழியன் தான் தயாரிக்க உள்ளார் என கூறப்படுகிறது. தனுஷன் ஏற்கனவே பல சிறந்த இயக்குனர்களுடன் பணியாற்றி உள்ளார்.

அதனால் படத்தை எப்படி இயக்கவேண்டும் என்பது நல்லதொரு புரிதல் வைத்திருப்பதாக பலர் கூறி வருகின்றனர் அந்த வகையில் நிச்சயம் தனுஷ் இயக்கி நடிக்கும் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்லதொரு கருத்துக்களை எடுத்துரைக்கும் திரைப்படமாக இருக்கும் அதில் தனுஷ் நிச்சயம் மிரட்டுவார் எனவும் கூறப்படுகிறது.

Leave a Comment