சியான் 60-ல் இணைந்த தனுஷ் பட பிரபலம்.! விஜய் பட தயாரிப்பாளரை கதறவிடும் கார்த்திக் சுப்புராஜ்.! தாங்குமா இந்த பட்ஜெட்

0

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் கடைசியாக ரஜினியை வைத்து பேட்ட திரைப்படத்தை இயக்கி வெற்றி கண்டார். அதனைத்தொடர்ந்து தனுஷை வைத்து ஜகமே தந்திரம் என்ற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார் இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. ஆனால் திரைப்படத்தின் கதை இணையதளத்தில் லீக்காகி வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் கார்த்திக் சுப்புராஜ் அடுத்ததாக சியான் 60 என்ற திரைப்படத்தை இயக்க ரெடியாகி விட்டார், இந்த திரைப்படத்தின் ஸ்பெஷல் என்னவென்றால் விக்ரமுடன் இணைந்து விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடிக்க இருக்கிறார் அதனால் படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. இந்த நிலையில் படத்தின் அறிவிப்பில் ஒரு புதிய போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டிருந்தார்கள்.

அந்த போஸ்டரில் ஒருவர் துப்பாக்கியை காட்டுவது போலவும் ஒரு குழந்தை அதை பிடிப்பது போலவும் இருந்தது, அதனால் இந்த திரைப்படம் கேங்ஸ்டார் திரைப்படமாக இருக்குமென பலரும் கருத்து தெரிவித்து வந்தார்கள், மேலும் இந்த திரைப்படத்தை விக்ரமின் முந்தைய திரைப்படம் மற்றும் விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தை தயாரித்த லலித்குமார் தான் தயாரிக்க இருக்கிறார்.

அதுமட்டுமில்லாமல் அனிருத் இசையமைக்க இருக்கிறார் எனவும் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள் அனிருத் முதன் முதலாக விக்ரம் திரைப் படத்திற்கு இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கார்த்திக் சுப்புராஜ் திரைப்படம் என்றாலே சந்தோஷ் நாராயணன் தான் இசையமைப்பார் ஆனால் பெரிய தயாரிப்பாளர்கள் என்றால் அவரை கழட்டி விட்டு விடுவார்கள்.

அதனால் சந்தோஷ் நாராயணன் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் நட்பு சிக்கலில் இருக்கிறது, இந்த திரைப்படம் கேங்க்ஸ்டார் திரைப்படம் என்பதால் பட்ஜெட் மிகக் குறைவாக போடப்பட்டுள்ளது, ஏனென்றால் கோப்ரா மற்றும் மாஸ்டர் ஆகிய திரைப்படங்களுக்கு அதிக அளவு செலவு செய்து விட்டதால் இந்த திரைப்படத்தில் சிக்கனம் காட்டி வருகிறார் லலித்குமார்.

எப்படியாவது போட்ட பணத்தை எடுத்துவிட வேண்டும் என்று குறிக்கோளுடன் இருக்கிறார் லலித்குமார் ஆனால் கார்த்திக் சுப்புராஜ் இந்த திரைப்படத்திற்கு பெரிய சம்பளம் உள்ள ஆட்களை தேர்வு செய்து பட்ஜெட்டை எகிற வைத்து வருகிறார். இந்த நிலையில் தனுஷின் ஜகமே தந்திரம் என்ற திரைப்படத்தில் பணிபுரிந்த ஒளிப்பதிவாளர் ஸ்ரேயாஸ் கிருஷ்ணா என்பவரை இந்த திரைப்படத்தில் கமிட் செய்துள்ளார்கள்.

அதனால் தயாரிப்பாளர் லலித்குமார் கொஞ்சம் அப்செட்டில் இருக்கிறார், இருந்தாலும் கார்த்திக் சுப்புராஜ் திரைப்படம் என்றால் ரசிகர்களிடம் கொஞ்சம் எதிர்பார்ப்பு இருக்கும் என்பதால் எல்லாம் அவன் செயல் என கடவுள் மீது பாரத்தை போட்டு முதலடியை எடுத்து வைத்துவிட்டார். இது எங்க போய் முடியும் என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.